இந்த அழகு தெய்வத்தின் அப்பா அம்மாவா இது.. நடிகைக்கு டன் கணக்கில் ஐஸ் வைக்கும் ஃபேன்ஸ்!!

சென்னை: பிரபல நடிகை வெளியிட்ட தனது பெற்றோரின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உருகியுள்ளனர்.

Recommended Video

Actress Challenge | Losliya, Simbran Tik Tok, Reba John, Athulya Ravi | Lock down diaries

நடிகை ரைஸா வில்சன் பிக்பாஸ் சீசன் ஒன்றின் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வேகத்தில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார்.

ஆனால் எந்த வேகத்தில் புதிய படங்களில் கமிட்டானாரோ அதே வேகத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. எப்படியாவது பட வாய்ப்புகளை பெற்று விட வேண்டும் என விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

நடிகர் மீது க்ரஷ்

நடிகர் மீது க்ரஷ்

அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் ரைஸா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு அறிமுகமாகி, பியார் பிரேமா காதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் ஹரீஷ் கல்யாண் மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக கூறினார். அவருடன் டேட்டிங் போக வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறினார்.

காதலர் போட்டோ

காதலர் போட்டோ

இதனால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார் ரைஸா. ஆனால் கடந்த காதலர் தினத்தின் போது இவர் தான் என் காதலர் என தனது காதலருடன் இருக்கும் போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் ரைஸா. அவர்களின் போட்டோ தொடர்ந்து வைரலானது.

சொல்லாதீர்கள்

சொல்லாதீர்கள்

சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைதளம் வாயிலாக பேசிய ரைஸாவிடம் ரசிகர் ஒருவர் ஹரீஷ் கல்யாண் அண்ணாவைதான் திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா என கேட்டார். அதற்கு ஆம் அவரை தான் திருமணம் செய்யப் போகிறேன், ஆனால் இதை அவரிடம் சொல்லாதீர்கள் என்று கூறினார்.

திருமணமான புதிதில்

திருமணமான புதிதில்

இந்த விவகாரமும் வைரலானது. இந்நிலையில் நடிகை ரைஸா வில்சன் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடை அப்பா அம்மாவின் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். தனது அப்பா அம்மா கல்யாணம் ஆன புதிதில் எடுத்த போட்டோ இது என்றும் தெரிவித்துள்ளார் நடிகை ரைஸா வில்சன்.

விண்டேஜ் ஹீரோ

விண்டேஜ் ஹீரோ

அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், உங்க அப்பா விண்டேஜ் டைம் ஹீரோ போல இருக்கார் என தெரிவித்துள்ளார்.

பன்முக கலாச்சாரம்

பன்முக கலாச்சாரம்

உங்க அம்மா உங்களை விட அழகா இருக்காங்க என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான இவர், உங்க அம்மா பஞ்சாப்பை சேர்ந்தவர்.. உங்க அப்பா கேரளா நான் சொல்றது சரியா.. பன்முக கலாச்சார பின்னணியை கொண்டிருப்பது சந்தோஷம்தான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X