சகிக்கல.. கழட்டிடுங்க ப்ளீஸ்.. கண்ட இடத்திலும் 'அதை' மாட்டிய பிக்பாஸ் நடிகை.. கெஞ்சும் நெட்டிசன்ஸ்!

சென்னை: முகம் முழுக்க வளையங்களை மாட்டியிருக்கும் பிக்பாஸ் நடிகையை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

Recommended Video

லாக்டவுன் இப்படி ஆக்கிடுச்சே? மரமேறி மாங்காய் பறித்த நடிகை! - வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ரைஸா வில்சன். மாடலான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பாகவே பல விளம்பரப்படங்களில் நடித்துள்ளார்.

அதோடு வேலையில்லா பட்டதாரி பார்ட் 2 படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எதிர்பார்த்தது போலவே ரைஸா வில்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

கவர்ச்சி போட்டோ

கவர்ச்சி போட்டோ

பிக்பாஸ் வீட்டில் தனக்கு நெருக்கமான நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார் ரைஸா. தற்போது எஃப்ஐஆர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் கவலையடைந்த ரைஸா தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வந்தார்.

செல்பி போட்டோ

செல்பி போட்டோ

தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் வீட்டில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் நேரத்தை செலவழிப்பது, அப்பா அம்மாவின் போட்டோவை சமூக வலைதளங்களில் பகிர்வது என பல போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். மேலும் தான் எடுக்கும் செல்பி போட்டோக்களையும் ஷேர் செய்கிறார் ரைஸா.

முகம் முழுக்க வளையங்கள்

முகம் முழுக்க வளையங்கள்

அந்த வகையில் ரைஸா வில்சன் தற்போது ஒரு போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் முகம் முழுக்க வளையங்களை அணிந்துள்ளார். அதாவது, புருவத்தில் மூன்று வளையங்கள், மூக்கில் ஒரு வளையம், உதட்டில் ஒரு வளையம் கன்னத்தில் ஸ்டட் என அணிந்துள்ளார்.

போட்டோ ஷாப்பா?

போட்டோ ஷாப்பா?

ரைஸா அவற்றை உண்மையிலேயே அணிந்துள்ளாரா அல்லது போட்டோ ஷாப் வேலையா என்று தெரியவில்லை. இருப்பினும் அதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு அது கொஞ்சமும் சூட் ஆகவில்லை என்றும் அதனை கழட்டுங்கள் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.

வடிவேலு போட்டோ

வடிவேலு போட்டோ

ரைஸாவின் அந்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன் சிங்கார வேலன் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் போட்டோவுடன் ஒப்பிட்டு கிண்டலடித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

அடக்க முடியவில்லை

அடக்க முடியவில்லை

ரைஸாவின் படத்தை ஹாலிவுட் படத்தில் இடம் பெறும் ஆதிவாசிகளின் ஸ்டில்லுடன் ஒப்பிட்டு மரண பங்கம் செய்திருக்கிறார் இந்த நெட்டிசன். மேலும் ரைஸாவின் ஹேர் ஸ்டைலையும் வட்டமிட்டு காட்டியிருக்கும் இந்த நெட்டிசன், என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X