அந்த ரேஞ்சுக்கு கீழ்த்தரமா இறங்கிடலாம்னு நினைச்சேன்..சேது பட நடிகை பகீர் பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்த நடிகை தான் ராஜஸ்ரீ. இவர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கருத்தம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து பாலாவின் சேது, நந்தா படத்தில் நடித்துள்ள இவர் சேது படம் குறித்து பல விஷயத்தை பேசி உள்ளார்.
போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனசைத் தொட்டு என்ற பாடலில் குனிந்த தலை நிமிராமல் பார்வையால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ராஜஸ்ரீக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். முதல் படத்திலேயே அழுத்தமான ரோலில் நடித்திருந்த இவர். இயக்குநர் பாலாவின் சேது படத்தில் பிச்சைக்காரியாக நடித்திருந்தார். மேலும், நந்தா படத்தில் சூர்யாவின் அம்மாவாகவும், ரன், மனசெல்லாம், வேட்டையாடு விளையாடு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை ராஜஸ்ரீ: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்துள்ள இவர், சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து, சின்னத்திரைக்கு வந்த இவர்,ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழ் சீரியல்களில் மட்டுமில்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
பாலா 25: தற்போது பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படம் ஜனவரி 12ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் அருண் விஜய், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில், பாலாவின் 25 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாட சென்னையில் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு பாலா குறித்து நெகிழ்ச்சியான பல விஷயத்தை பேசினார்கள். இதில், இயக்குநர் மிஷ்கின், பாலா குறித்து சொன்ன விஷயம் மிகவும் உருக்கமாக இருந்தது.
துவைக்கவே இல்லை: இந்நிலையில், பாலாவின் முதல் திரைப்படமான சேது படத்தில் பிச்சைக்காரியாக நடித்த ராஜஸ்ரீ அந்த படத்தில் நடித்தது குறித்து பேசி உள்ளார். அதில், சேது படத்தில் மூன்று ஆண்டுகளாக ஒரே உடையைத்தான் போட்டு இருந்தேன். அதை பாலா துவைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். சேது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் விக்ரமின் காலைபிடித்துக்கொண்டு மண்ணில் புரண்டு அழுவேன், அந்த டிரஸ் புல்லா பயங்கரமான அழுக்கு, அப்போ கூட அந்த டிரசை பாலா துவைக்க விடல, அந்த டிரசை பாலா பொக்கிஷம் மாதிரி பேகில் வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டே இருப்பார்.
சேது படத்தில் பிச்சைக்காரி: எப்போடா படத்தோட ஷூட்டிங் முடியும், இந்த டிரைசை எப்போ அவுத்துப் போட்டா நல்லாருக்கும்னு நினைச்சேன். அந்த உடையை மியூசியமில் வைத்துவிடலாம் என்று கூட யோசித்தேன். ஆனால், சேது படத்தில் பிச்சைக்காரி கதாபாத்திரத்தில் நடித்ததற்கு பலரும் பாராட்டினார்கள் இன்று வரைக்கும் அந்த பெயர் இருக்கிறது. அதற்கு பிறகு நந்தா படத்தில் சூர்யாவிற்கு அம்மாவாக நடித்தேன். அந்த அனுபவத்தை மறக்க முடியாது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் சூர்யாவை விட ஐந்து, ஆறு வயது சின்னவள், சூர்யா பெரியவர் இருந்தாலும் அந்த படத்தில் நான் அவருக்கு அம்மாவாக நடித்தேன். சூர்யாவை நான் அண்ணா என்று கூப்பிட்டால் திட்டுவார். இப்பவும் நான், சூர்யா, பாலா சார் அனைவரும் நல்ல நண்பர்கள் தான், பேசிக் கொண்டுதான் இருக்கிறோம் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்


Click it and Unblock the Notifications











