ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு கூடிபோன விஜய் பட நடிகை.. கையில அது வேற.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தற்போது மூன்று மடங்கு எடை கூடிப்போய் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன போட்டோ வெளியாகியுள்ளது.

பெங்களூரை பூர்விகமாக கொண்டவர் நடிகை ரக்ஷிதா. ஏராளமான கன்னட மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்துள்ளார் ரக்ஷிதா.

தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக தம் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிஸியாக இருந்தார்.

விஜய்க்கு ஜோடி

விஜய்க்கு ஜோடி

இந்நிலையில் 2004ஆம் ஆண்டு வெளியான மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் ஹைட் அன்ட் வெயிட்டாக பார்க்க கச்சிதமாக இருந்தார். இதனால் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களில் வாய்ப்புகள் அலை மோதியதால் தமிழில் நடிக்காமல் இருந்தார்.

சினிமாவுக்கு டாடா

சினிமாவுக்கு டாடா

தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் பீக்கில் இருந்த போதே கன்னட சினிமா இயக்குநரான பிரேம் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திய நடிகை ரக்ஷிதா, பின்னர் டிவி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். இதேபோல் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணிபுரிந்து வருகிறார்.

செம குண்டு

செம குண்டு

அரசியலில் குதித்த ரக்ஷிதா தேர்தலிலும் போட்டியிட்டார். இந்நிலையில் ரக்ஷிதா முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு வெயிட் போட்டிருக்கிறார். இவரா அவர் என்று கேட்கும் அளவுக்கு நம்ப முடியாத நிலையில் எடை கூடி, இவரா அவர் என்று கேட்கும் அளவுக்கு செம குண்டாக இருக்கிறார்.

பீர் பாட்டிலுடன்

பீர் பாட்டிலுடன்

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ரக்ஷிதா ஜோகய்யா, டிகே என்ற 2 கன்னட படங்களை தயாரித்தார். ரக்‌ஷிதா தற்போது ஏக் லவ் யா என்ற படத்தை தயாரித்திருக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டரில் ஹீரோ, ஹீரோயினுடன் பீர் பாட்டிலை வைத்தபடி ரக்‌ஷிதா போஸ் தந்திருக்கிறார்.

ரசிகர்கள் அட்வைஸ்

ரசிகர்கள் அட்வைஸ்

அதில் ரக்‌ஷிதாவின் இந்த குண்டான தோற்றம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எப்படியாவது உடல் எடையை குறைத்து பழையப்படி ஃபார்முக்கு வாங்க என்று ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர். ரக்ஷிதா ஆளே மாறி போயுள்ள போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X