Rakul Preet Singh: கழுத்தில் தாலி தெரிய.. வெறும் சட்டையில் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!
சென்னை: நடிகைகளுக்கு திருமணம் ஆனவுடன் தாலியை வெளியில் போட்டுக் கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், நடிகை நயன்தாரா தாலி வெளியில் தெரியும்படி போட்டோவிற்கு போஸ் கொடுத்திருந்தார். அடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ், தாலி வெளியே செல்லும்படி போட்டோவுக்கு போஸ் கொடுத்து இணையத்தில் ட்ரெண்டாக பேசப்பட்டால். தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் தாலி வெளியே தெரியும்படி கவர்ச்சி உடையில் அட்டகாசமாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த போட்டோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
நடிகை ரகுல் ப்ரீத் 2009ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி படத்தில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பின் தமிழில், யுவன் படத்தில் நடித்தார். அதன் பிறகு தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அடுத்தடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போதும், எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

2017ஆம் ஆண்டு மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஸ்பைடர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவரது கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
தமிழ்சினிமாவில்: இதன்பின் தான், கார்த்திக்குடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் குழந்தை தனமான கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. தமிழில் மட்டுமன்றி அவ்வப்போது பாலிவுட்டிலும் தலைக்காட்டி வந்த ரகுல் ப்ரீத் சிங், தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பகானை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவா பீச் ரெசார்ட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் நண்பர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெறும் சட்டையுடன்: திருமணத்திற்கு பிறகும் ரகுல் ப்ரீத் சிங் திரைப்படத்தில் நடித்து வரும் ப்ரீத் சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெறும் சாட்டையை மட்டுமே போட்டுக்கொண்டு, தாலியை வெளியே தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷுக்கு போட்டியா என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி ஓராண்டுக்கு பின், தாலி தெரியும்படி போஸ் கொடுக்க என்ன காரணம்... இதுதான் இப்போது பேஷன் என்பதால் செய்கிறாரா இணையவாசிகள் கமெண்டில் கேட்டு வருகின்றனர். இந்த போட்டோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











