தலைக்கணம் பிடித்த பெண் தான் போல! கமல் படம் என்பதால் இந்தியன் 2இல் நடிக்கவில்லை - ரகுல் ப்ரீத் சிங்

சென்னை: தமிழ் சினிமாவில் தடையறைத் தாக்க என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். ஹெச். வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் குறும்புக்கார பெண்ணாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். இவர் தற்போது உலக நாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்தியன் 2 படத்தில் தான் ஏன் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்ற காரணத்தையும் அவர் கூறியுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Rakul Preet Singh Kamal Haasan Indian 2 Anirudh Shankar 2

இந்தியன் 2

இந்தியன் 2 படம் 1996ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு வெளியானபோது கமல் ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவருடன் சுகன்யா, மனிஷா கொய்ராலா, கஸ்தூரி, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர்.

Rakul Preet Singh Kamal Haasan Indian 2 Anirudh Shankar 2

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை படமாக்கியுள்ளனர். அதில் கமல் ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மிகவும் பிரமாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தினை லைகா புரோடெக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. அடுத்த மாதம் அதாவது ஜீலை மாதம் 12ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

Rakul Preet Singh Kamal Haasan Indian 2 Anirudh Shankar 2

படத்தில் நடிக்க முக்கிய காரணம்

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் தான் ஏன் இந்தியன் 2 படத்தில் நடித்தேன் என்பதையும் தனது கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதையும் கூறியுள்ளார். அதில், "இந்தியன் 2 படம் எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்களான கமல் ஹாசன், ஷங்கர் இருப்பதால் நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனது நிஜ வாழ்க்கையோடு பொருந்திப் போகும் கதாபாத்திரமாக இருந்ததால்தான் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தியன் 2 படத்தின் எனது கதாபாத்திரம் ஒரு தலைக்கணம் பிடித்த தைரியமான பெண் கதாபாத்திரம். இயக்குநர் ஷங்கருடன் பணிபுரிந்ததில் எனக்கு நிஜமாலுமே மகிழ்ச்சிதான். எனது கதாபாத்திரம் குறித்து இயக்குநர் ஷங்கர் என்னிடம் மிகவும் சிறப்பாக இன்னும் சொல்லப்போனால் அந்த கதாபாத்திரத்தின் தன்மை குறித்து மிகவும் நுணுக்கமாக விவரித்ததும் படத்தில் நான் நடிக்க ஏதுவாக இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த பேச்சு கமல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.

Rakul Preet Singh Kamal Haasan Indian 2 Anirudh Shankar 2

இந்தியன் 2 திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் இருப்பதால் லைகா புரெடக்‌ஷன்ஸ் தரப்பில் படத்துக்கான புரோமஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இயக்குநர் ஷங்கர் தனது அடுத்த படமான கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பிற்குச் சென்று விட்டார். கமல் ஹாசனும் தக் லைஃப் மற்றும் கல்கி படங்களில் பிசியாக இருகின்றார்.

Rakul Preet Singh Kamal Haasan Indian 2 Anirudh Shankar 2
Rakul Preet Singh Kamal Haasan Indian 2 Anirudh Shankar 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X