ராட்சசன் இந்தி ரீமேக்… அமலாபால் கதாபாத்திரத்தில் நடிக்க போவது இவரா?

சென்னை : தமிழில் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ராட்சசன் இந்தி ரீமேக்கில் அமலாபால் கதாபாத்திரத்தில் ராகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரகுல் ப்ரீத் சிங் தமிழில் 2 படங்களிலும், இந்தியில் 3 படங்களிலும் நடித்து வருகிறார்.

சைக்கோ கில்லர்

சைக்கோ கில்லர்

இயக்குனர் ராம் குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் சைக்கோ கில்லர் திரைப்படம் ராட்சசன். பள்ளி மாணவிகளை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யும் சைக்கோவை தேடிப்பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் இத்திரைப்படத்தில் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருப்பார்.

பெல்லம் கொண்டா சீனிவாஸ்

பெல்லம் கொண்டா சீனிவாஸ்

தமிழில் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதில் பெல்லம் கொண்டா சீனிவாஸ் நடிக்கிறார். மேலும், கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

ராட்சசன் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்க உள்ளார். அவரே இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரமேஷ் வர்மா இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அக்ஷய் குமார் Bell Bottom, Sooryavanshi, Atrangi Re என ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை.

அமலாபால் வேடத்தில்

அமலாபால் வேடத்தில்

ராட்சசன் இந்தி ரீமேக்கில் அமலாபால் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையல், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் நம் மனதை கவர்ந்த ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இவர், அயலான் , இந்தியன்2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், சிங் Attack , Mayday, Thank god என்ற 3 இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X