ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க..ரசிகர்களிடம் கெஞ்சிய நடிகை ரம்பா.. அப்பவும் வேலைக்கு ஆகல!
சென்னை: சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்த போது அதில் அளவிற்கு அதிகமான டிக்கெட் வழங்கியதன் காரணமாக டிக்கெட் வாங்கியவர்கள் இசை நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத தவித்தனர். இந்த நேரத்தில் பெண்கள் சிலர் பாலியல் சீண்டலுக்கும் ஆளானார்கள். இதனால், எழுந்த எதிர்ப்பை அடுத்து ஏஆர் ரகுமான் டிக்கெட் பணத்தை அனைவருக்கும் திருப்பி கொடுத்தார்.இதைவிட மோசமான ஒரு சம்பவம் இலங்கையில் ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் நடந்துள்ளது.
இலங்கையில் ஹரிஹரன் நிகழ்ச்சியில் நடந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிகழ்ச்சிக்கு வந்தவிதமான கட்டணமும் இல்லை அனைவரும் வரலாம் அனுமதி இலவசம் என்ற விளம்பரம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியை காண 25000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை ஆகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹரிஹரன் இசை நிகழ்ச்சி: நேற்று நடந்த இந்த இசை நிகழ்ச்சியில், இலவச பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால், பார்வையாளர்களால் நிகழ்ச்சியை பார்க்கமுடிவில்லை. இதனால், அங்கிருந்தவர்கள் பிளாஸ்டிக் இருக்கைகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து சேரின் மீது ஏறிப்பார்த்தார்கள். இன்னும், சிலர் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த கோபுரத்தின் மீது ஏறினார்கள்.
போலீஸ் தடியடி: இலவச பகுதியில் கூட்டம் அதிகம்இருந்த நேரத்தில் கட்டண பகுதியில் காலியாக இருந்ததால், அங்கிருந்த இருந்த இளைஞர்கள் திடீரென கட்டணப்பகுதிக்கு படையெடுத்து ஓடினார்கள். இதனால் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்திய நிலையில், இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது.
கெஞ்சிய ரம்பா: இதனால் அதிர்ச்சிக்குள்ளான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நடிகர் ரம்பாவின் கணவர் அதிர்ச்சிக்குள்ளானார். கணவருக்காக மேடை எறிய நடிகை ர்ம்பா, தயவு செய்து அமைதியா இருக்க, நீங்கள் இப்படி எல்லாம் செய்தால் நிகழ்ச்சியை நடத்த முடியாது, நல்ல நிகழ்ச்சி வேண்டும் என்றால் அமைதியாக இருக்க. இந்த நாட்டுக்கு நடிகர்கள் போலீசை நம்பி வரல, மக்கள் உங்களை நம்பித்தான் வந்து இருக்கோம்.ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருக்க. அனைவரும் பயப்படுறாங்க, நம்ம நாட்டுக்கு வந்தவங்களை பயமுறுத்தி அனுப்பலாமா,தயவு செய்து எனக்காக அமைதியாக இருக்க என்று கெஞ்சினார். ரசிகர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளாதால், 20 நிமிடம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
அதிகபடியான கட்டணம்: இந்த சம்பவத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இலவசம் என அறிவித்துவிட்டு பின் அதிகபடியான கட்டணத்தை வைத்து டிக்கெட்டை விற்றது தான் பிரச்சனை என என்று சொல்லப்படுகிறது. ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள். இது எங்கள் தவறு எதுவும் இல்லை என்றும் இலவச பார்வையாளர்கள் உள்ளே நுழைந்ததால் பிரச்சனை ஏற்பட்டது என்றும் 20 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ச்சி தடைபட்டதாகவும் அதன் பின் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நன்றாக நடந்தது என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











