விஜய் அப்பார்ட்மெண்ட் பக்கத்தில் குடியேறிய நடிகை.. இது என்னடா புது கதை!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஒரு பக்கம் அரசியல், மறுபக்கம் சினிமா என பிஸியாக இருந்தாலும், அவர் குறித்த சர்ச்சை கொஞ்சமும் குறையாமல் இருந்து வரும் நேரத்தில், அவரின் வீட்டு பக்கத்திலேயே பிரபல நடிகை ஒருவர் வீடு வாங்கி குடியேறி உள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி சௌத்ரி என பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அறிவித்துள்ளது. படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான அடுத்த கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மீண்டும் மீண்டும் கிசுகிசு: அரசியல் கட்சித் தொடங்கி உள்ள விஜய் கோட் படத்தை முடித்துவிட்டு அடுத்து தளபதி 69 படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதற்கான கட்சி பணிகளை மும்முரம் காட்டி வரும் விஜய், கடந்த மாதம் பத்தாம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொது தேர்தவில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களை அழைத்து கௌரவித்து அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தார். இந்த விழாவில் அவர் நீட் தேர்வு குறித்து பேசியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
விஜய் அப்பார்ட்மெண்டில் குடியேறிய நடிகை: இப்படி சினிமா மற்றும் அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய் குறித்து பலவிதமான கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. விஜய் பிறந்தநாளுக்கு, நடிகை த்ரிஷா விஜய்யுடன் லிப்ட் ஒன்றில் எடுத்துக்கொண்ட மிரர் செல்பியை இன்ஸ்டாவில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து இருந்தார். அவர் போட்டோவை போட்டது தான் தாமதம், அந்த போட்டோவை வைத்து இணையத்தில் பெரும் புயலை கிளப்பி பேசு பொருளாக மாறியது. தற்போது அந்த பேச்சு சற்று ஓய்ந்து இருக்கும் நிலையில் நடிகை ஒருவர் விஜய் வாங்கிய அப்பார்ட்மெண்ட்டில் ஒரு வீடு வாங்கி குடும்பத்தினருடன் செட்டில் ஆகியுள்ளாராம்.
யார் அந்த நடிகை: இது என்னடா புது கதையா இருக்கே, யார் அந்த நடிகை என்று பார்த்தால், விஜய்யுடன் பல படத்தில் நடித்த நடிகை ரம்பா தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. வீடு வாங்கி கையோடு, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விஜய்யை நேரில் சந்தித்து போட்டோவும் எடுத்துள்ளார். அந்த போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இலங்கையைச் சேர்ந்த ரம்பாவின் கணவர் மேஜிக் ஹோம் என்ற ஃபர்னிச்சர் தொழிலை ஆரம்பித்து நடத்தி வருகிறார். அதையெல்லாம் இங்கு இருந்து பார்த்துக்கொள்ள தான் அந்த வீட்டினை வாங்கி குடியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இணையத்தில் இந்த செய்தியைப் பார்த்த ரசிகர்கள் த்ரிஷாவிற்கே டஃப் கொடுப்பீங்க போல என்றும், த்ரிஷாவுடன் சண்டை வராமல் இருந்தா சரி என இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











