அழகிய லைலாவை மறக்க முடியுமா? எப்ப மேடம் நடிக்க வர்றீங்க? நடிகை ரம்பாவை பாசமாக அழைக்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: நடிகை ரம்பா நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Recommended Video

Rambha Indran Wedding Anniversary | 'No Relatives N Friends' | Lock down diaries

கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை மத்திய அரசு நேற்று வழங்கியது. கூடவே வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

விரைவில் அனுமதி

விரைவில் அனுமதி

இதையடுத்து தமிழக அரசும் படப்பிடிப்புகளைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கும் என்று தெரிகிறது. இதற்கிடையே, படப்பிடிப்புகள் இல்லை என்பதால் நடிகர், நடிகைகளின் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது, சோசியல் மீடியா. அவர்கள் அதில் அடிக்கடி தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் ஹீரோயினான ரம்பாவும் இதில் ஆக்டிவாக இருக்கிறார்.

உள்ளத்தை அள்ளித்தா

உள்ளத்தை அள்ளித்தா

நடிகை ரம்பா, தமிழில், உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, ரஜினியின் அருணாச்சலம், அஜித்தின் ராசி, விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய் உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்பா. கடைசியாக பெண்சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். பின்னர் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எளிமையாக

எளிமையாக

திருமணத்துக்குப் பின் நடிப்பதை நிறுத்திவிட்ட அவர், கனடாவில் கணவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு லாவண்யா, சாஷா என்ற மகள்களும் ஷிவின் என்ற மகனும் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 11 ஆம் தேதி, தனது திருமண நாளைச் சிறப்பாகக் கொண்டாடும் ரம்பா, கடந்த திருமண நாளை எளிமையாகக் கொண்டாடி இருந்தார்.

திருமண நாள்

திருமண நாள்

லாக்டவுன் காரணமாக, யாரையும் அழைக்காமல் வீட்டிலேயே இந்த திருமண நாளை கொண்டாடியதாகத் தெரிவித்திருந்த ரம்பா, ஃபேமிலி போட்டோவையும் வெளியிட்டிருந்தார். அது வைரலானது. இந்நிலையில் இப்போது தனது சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் ரம்பா. இதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். பலர் தங்கள் கமென்ட்களை பதிவு செய்துள்ளனர்.

மிஸ் பண்றோம்

மிஸ் பண்றோம்

'இது என்னுடைய கிளிக்ஸ், கண்களுக்கும் உதட்டுக்கும் மட்டும் லைட்டான மேக்கப் போட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் ரம்பா. ஒரு நெட்டிசன், 'நீங்க எப்பவுமே அழகுதான். உங்களுக்கு எதுக்கு மேக்கப்? என்று கேட்டுள்ளார். இன்னொரு பாசக்கார ரசிகர், சீக்கிரமா சினிமால நடிக்க வாங்க ரம்பா, உங்களை ரொம்ப மிஸ் பண்றோம் என்று கூறியுள்ளார்.

அழகிய லைலா

அழகிய லைலா

அந்த குழந்தைத்தனமான சிரிப்பு செம அழகு என்று சிலர் கூறியுள்ளார். ஒரு ரசிகை, சமீபத்தில் நீங்கள் நடித்த சில படங்களை சேனல்களில் பார்த்தேன். நீங்க மிரட்டி இருக்கீங்க என்று கூறியுள்ளார். சிலர், எங்க அழகிய லைலாவை மறந்திட முடியுமா? என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர் அன்றும் இன்றும் அதே கொள்ளை அழகு என்று வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X