Rambha: நான் Business Lady..என்னை மேடம்னு கூப்பிடாதீங்க.. நடிகை ரம்பா என்ன இப்படி சொல்றாங்க?
சென்னை: 2000களில் கலக்கிக் கொண்டு இருந்தவர் நடிகை ரம்பா. ஹோம்லியான கதாபாத்திரம் என சொன்னாலும் ரம்பாவை வைத்து இரண்டு மூன்று பாடல்கள் கிளாமராக தேத்தி விடலாம் என்று கணக்கு போட்ட தயாரிப்பாளர்களும் இருந்த கால கட்டம் அது. ஆனாலும் தனது நடிப்பால் தமிழ் மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாபன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆனார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள். இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ரம்பா திருமணத்திற்குப் பின்னர் தனது கணவருடன் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். சினிமாவில் சுறுசுறுப்பாக நடித்து வந்த ரம்பாவை திருமணம் செய்து வீட்டில் இருக்கச் சொன்னால் இருப்பாரா? இருக்கத்தான் முடியுமா? ரம்பா இயல்பாகவே சுறுப்பானவர். அவரது உடல் மட்டும் இல்லாமல் மூளையும் மிகவும் சுறுசுறுப்பான மூளை. எப்போது ஏதாவது செய்து கொண்டு இருப்பார் ரம்பா. இதனால் திருமணத்திற்குப் பின்னர் வீட்டில் இருக்கும் சமையலறையை எப்படி உருவாக்குவது என்ற படிப்பினை படித்துள்ளார். அதை தொழிலாகவே செய்து வருகிறார்.

மேடம்: இது தொடர்பாக கேட்டபோது ரம்பாவை மேடம் எனக் குறிப்பிட்டு நடன இயக்குநர் கலா மாஸ்டர் கேட்டார்.அதற்கு பதில் அளித்த ரம்பா, " எந்த பிசினஸ் வுமனும் தன்னை மேடம் என்று அழைப்பதை விரும்பமாட்டார்கள். அவர்கள் தங்களை அவர்களது பெயர் கொண்டு அடையாளப்படுத்த வேண்டும் என்று தான் நினைப்பார்கள். எனவே என்னை நீங்கள் மேடம் என்று அழைக்கத் தேவையில்லை. ரம்பா என்று அழைத்தாலே போதும்.
கிச்சன்: நான் மிகவும் சுறுசுறுப்பான லேடி என்று எனது கணவரே கூறுவார். அதே நேரத்தில் உனக்கு சினிமாவில் நடிக்க எண்ணம் இருந்தால் தாராளமாக நடி, அதே நேரத்தில் குடும்பத்தின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும், தொழில் மீதும் அக்கறை கொள்ள வேண்டும், உடல் நலன் மீதும் அக்கறை கொள்ள வேண்டும் என்று கூறினார். நான் மூன்று குழந்தைகளை பெற்ற பின்னர் அவர் என்னை படிக்க வைத்தார். நான் சுமார் இரண்டரை ஆண்டுகள் ஜான் பிச்சடி என்ற இத்தாலிய டிசைனரிடம் கிச்சனை வடிவமைப்பது குறித்து படித்துள்ளேன்.

தொழில்: எனக்கு இயல்பாகவே கிச்சனை அழகுபடுத்துகிற, அங்கு உள்ள இடத்தை சரியாக பயன்படுத்துகிற அறிவும் ஆற்றலும் இருந்தது. நாங்கள் ஒரு முறை வீடு மாறும் போது, அந்த வீட்டின் கிச்சன் டிசைனராக இருந்த ஜான் பிச்சடியின் பிளான் நன்றாக இருந்தது. ஆனால் எனக்கு அதில் சில மாற்றங்கள் தேவைப்பட்டது. நான் அது குறித்து கூறும்போது அவருக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இது மட்டும் இல்லாமல் நான் எனக்கு கிச்சன் எப்படி வேண்டும் என்று கூறும்போது ஒவ்வொன்றையும் மிகவும் சரியாக விவரித்தேன். அதனாலே என்னவோ எனக்கு இதில் அதீத ஆர்வம் உள்ளது என்பதை ஜான் பிச்சடியும் எனது கணவரும் புரிந்து கொண்டார்கள். அதன் பின்னர்தான் நான் இந்த தொழிலில் கால் பதித்தேன்" என்று கூறினார். ரம்பாவின் இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











