“சார் ரம்பா சார்“..கணவரை இறுக்கி அணைத்து செம ரொமான்ஸ்..பொறாமையில் பொங்கும் ரசிகர்கள்!
சென்னை : நடிகை ரம்பா தனது கணவரை இறுக்கமாக கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 90களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
அதன் பின்னர் உள்ளத்தை அள்ளித்தா,சுந்தர புருஷன், செங்கோட்டை, விஐபி, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

நடிகை ரம்பா
நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் ஐ லவ் யூ.. லவ் யூ.. என்று சொன்னாலே என்ற பாடலில் பாவடையை காற்றில் பறக்கவிட்டு ஒட்டுமொத்த இளைஞர்களையும் வளைத்துப்போட்டார். அந்த பாடலில் இவரின் ஆட்டத்தைப் பார்த்து மயங்கிய இளசுகள் ரம்பாவுக்கு தொடையழகி ரம்பா என பட்டப்பெயர் வைத்து செல்லமாக அழைத்தனர். அவ்வளவு ஏன் தொடையை ரம்பா இன்சூரன்ஸ் செய்து இருப்பதாகவும் அப்போது பேச்சுக்கள் அடிபட்டன.

முன்னணி ஹீரோக்களுடன்
ரம்பா தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் பெங்காலி, போஜ்புரி போன்ற பல்வேறு மொழிகளிலும், ரஜினி,கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்து தன்னுடைய நடிப்பு திறமையால் கொடிகட்டிப்பறந்தார். ரம்பா தமிழில் கடைசியாக பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

திருமணம்
கடந்த 2010ஆம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலான ரம்பா அதன் பிறகு, சினிமாவில் தலைகாட்டவே இல்லை. ரம்பா, இந்திரகுமார் பத்மநாபன் தம்பதியினருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உண்டு. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்பா கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

"சார் ரம்பா சார்"
தற்போது கனடாவிலிருந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வந்துள்ள ரம்பா, தனது தோழிகளான குஷ்பூ, மீனா, சினேகா உள்ளிட்டவர்களை சந்தித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் தனது கணவரை இறுக்கமாக கட்டி அணைத்தபடி இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வரும் நேரத்தில், ரம்பாவின் தீவிர ரசிகர்கள் "சார் ரம்பா சார்" என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











