நம்பவே முடியல.. 50வது பிறந்தநாள்.. நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடியா ராஜ மாதா.. வைரல் போட்டோஸ்!
சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது 50வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ரம்யா கிருஷ்ணன், 1984 ஆம் ஆண்டு தனது 14 வயதில் வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
இதுவரை 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

பெரும் பேரும் புகழ்
அவரது நடிப்பில் வெளியான படையப்பா, பாகுபலி சீரிஸ் படங்கள் அவருக்கு பெரும் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கோலொச்சி வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.

கேக் வெட்டி
இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 50வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இதனை முன்னிட்டு நள்ளிரவில் குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி உள்ளார் ரம்யாகிருஷ்ணன்.

பிறந்த நாள் வாழ்த்து
அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில், கணவர் மகன் மற்றும் குடும்பத்தினர் சூழ சுடிதாரில் சிக்கென்று இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நம்பவே முடியல
இன்னும் சில நெட்டிசன்கள் உங்களுக்கு 50 வயசாயிடுச்சா? நம்பவே முடியல என அவரது அழகை பாராட்டியுள்ளனர். இன்னும் சிலர் நிச்சயமா தெரியுமா உங்களுக்கு 50 வயசுதானா ஏதாவது தாப்பா இருக்கப்போகிறது என்றும் கூறியுள்ளனர்.
Recommended Video

டாப் நடிகர்கள்
நடிகை ரம்யா கிருஷ்ணன் ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் உள்ள டாப் நடிகர்கள் அத்தனை பேருடனும் இணைந்து நடித்துள்ளார். சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











