மகிழ்மதியில் பழரசம் தீர்ந்ததா.. சரக்கு பாட்டில்களை கடத்திய ராஜமாதா.. கானத்தூரில் கார் ஓட்டுநர் கைது!
சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் சரக்கு பாட்டில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களிம் பட்டைய கிளப்பியிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இதுவரை 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். இவர் அனைத்து மொழிகளிலும் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சூர்யா வரை
குறிப்பாக தமிழில் சிவாஜி கணேசன், ஜெய் சங்கர், எம்என் நம்பியார், நாகேஷ் உள்ளிட்ட பழம் பெரும் நடிகர்களுடனும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார்.

அமிதாப்புடன்..
இதேபோல் தெலுங்கில் என்டி ராமா ராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், நாகார்ஜூனன், பாலகிருஷ்ணா, ஹரிகிருஷ்ணா உள்ளிட்ட பலருடனும் நடித்திருக்கிறார். மேலும் இந்தியில் தர்மேந்திரா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட உச்ச நடிகர்களுடன் நடித்துள்ளார்.

படையப்பா படம்..
இதேபோல் மலையாளத்தில் மோகன் லால், மம்மூட்டி உட்பட பலருடனும் நடித்துள்ளார். கன்னட சினிமாவிலும் உபேந்திரா, புனித்குமார் என பிரபலங்கள் பலருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக, அவரை தூக்கி சாப்பிடும் படியான மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

பிச்சு உதறி வருகிறார்..
படையப்பா படத்தில் அவரது நடிப்பு பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. ஹீரோயின், வில்லி, அம்மன், கிளாமர் என கிடைக்கும் கேரக்டர்களில் எல்லாம் பிச்சு உதறி வருகிறார். கமல்ஹாசனுடன் இவர் நடித்த பஞ்சதந்திரம் படம் பெரிதும் பேசப்பட்டது.

ராஜமாத சிவகாமி தேவி
எஸ்எஸ் ராஜமவுளி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் இவரது நடிப்பு கிரீடத்தில் மேலும் ஒரு ரத்தினமாக பதிந்தது. ராஜமாத சிவகாமி தேவியாக மிரள விட்டார். ராஜமாதாவாக துணிச்சலாக, விழிகளை உருட்டி அவர் நடித்திருந்த காட்சிகள் அப்ளாஸை அள்ளின.

என் கட்டளையே சாசனம்
குறிப்பாக, அதுவே என் கட்டளை.. என் கட்டளையே சாசனம் என அவர் கம்பீரமாக பேசும் டயலாக்கும் பெரும் வரவேற்பை பெற்றது. பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமாதா என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார் ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்த புகாரில் சிக்கி தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

சரக்கு பாட்டில் கடத்தல்
அதாவது சென்னை கானாத்தூரில் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து வந்த நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது காரில் கடத்தி வரப்பட்ட 102 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காரில் மூன்று பேர்
நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் 96 பீர் பாட்டில்கள், 3 பிளாக் லேபிள் பிளாக், 3 பிளாக் லேபிள் ரெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரில் ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி அபிநய கிருஷ்ணன் மற்றும் ஓட்டுநர் இருந்துள்ளனர்.

ஓட்டுநருக்கு ஜாமீன்
தடையை மீறி காரில் மதுவை கடத்தி வந்த புகாரில் ரம்யா கிருஷ்ணனின் கார் ஓட்டுநர் கானாத்தூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் செல்வக்குமாரை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி அபிநய கிருஷ்ணன் ஆகியோர் ஜாமினில் அழைத்து வந்தனர்.

பழரசம் தீர்ந்துவிட்டதா?
ரம்யா கிருஷ்ணன் காரில் இருந்து சரக்கு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அறிந்தவர்கள், மகிழ்மதியில் பழ ரசம் தீர்ந்துவிட்டதா.. ராஜமாதா சரக்கை கடத்த தொடங்கிவிட்டார் என கிண்டலாக கேட்க தொடங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications











