வளையகாப்பு போட்டோக்களை பகிர்ந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்.. வயசே ஆகவில்லை என பெருமூச்சுவிடும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது வளையகாப்பு போட்டோக்களை தற்போது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.
பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களிலும் டாப் நடிகையாக வலம் வருகிறார்.
இதுவரை 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். இவர் அனைத்து மொழிகளிலும் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

டிவி சீரியல்கள்
பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள ரம்யா கிருஷ்ணன் ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான கலசம், தங்கம், வம்சம் ஆகிய சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தங்க வேட்டை என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

ராஜமாதா சிவகாமி தேவி
ரஜினிகாந்துக்கு வில்லியாக படையப்பா படத்தில் நடித்து பெரும் பாராட்டை பெற்றார். அவரது அட்டகாசமான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பாகுபலி படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. ராஜமாதாவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உலகம் முழுக்க பிரபலமானார்.

சமூக வலைதளங்களில்..
ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பட இயக்குநரான கிருஷ்ண வம்சியை கடந்த 2003ஆம் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

கவனம் பெற்ற போட்டோ
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய பள்ளிப்பருவ போட்டோவை பகிர்ந்தார். அதில் தான் எங்கே இருக்கிறேன் என்பதை கண்டு பிடியுங்கள் என ரசிகர்களுக்கு வேலை கொடுத்தார். இந்நிலையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

வளையகாப்பு போட்டோ
அதாவது தனது வளையகாப்பு போட்டோவை ஷேர் செய்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். ஒன்றில் தனது பெரியம்மாக்கள் தனக்கு வளையல் போட்டுவிடும் போட்டோக்களையும் மற்றொன்றில் தனது அம்மா தன்னுடைய வளையகாப்பை கேமராவில் படம் பிடிப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

வயசே ஆகவில்லை
இந்த போட்டோக்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டவை. தற்போது நாஸ்டல்ஜிக் என அவற்றை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். அதனை பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கு வயசே ஆகவில்லை, அப்படியே இருக்கிறீர்கள் என வாயை பிளந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











