Ramya Krishnan: பஞ்சதந்திரம் 2 வந்தா நல்லா இருக்கும்.. ஜெயிலர் நாயகியின் ஆசை!
சென்னை: நடிகர் கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஸ்ரீமன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் என நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியிருந்த படம் பஞ்ச தந்திரம்.
இந்தப் படத்தில் காமெடி கலாட்டாக்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் கமல்ஹாசன்.
படத்திற்கு வசனமெழுதியிருந்த கிரேசி மோகன் கேரியரில் மிகவும் சிறப்பான படமாக பஞ்ச தந்திரம் இருந்தது.

பஞ்சதந்திரம் 2 படம் குறித்து ரம்யா கிருஷ்ணன் விருப்பம்: நடிகர்கள் கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஸ்ரீமன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், நாகேஷ், மணிவண்ணன், சந்தானபாரதி, ஊர்வசி, கோவை சரளா என நட்சத்திரப்பட்டாளத்தையே வைத்து வெளியான படம் பஞ்ச தந்திரம். கே.எஸ் ரவிக்குமார் கேரியரில் தி பெஸ்ட்டாக அமைந்த படம் இது. தற்போது மிகவும் வரவேற்பை பெற்றுவரும் மல்ட்டி ஸ்டாரர் கதைக்களத்தில் வெளியான இந்தப் படத்தில் ஐந்து குறுந்தாடிகள் இணைந்து செய்யும் காமெடி கலாட்டாக்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தன.
இந்தப் படத்தில் கமலின் மனைவியாக சிம்ரன் நடித்திருந்தார். ஆனால் படத்தில் கால் கேர்ளாக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு நடிப்பதற்கு அதிகமாக ஸ்கோப் காணப்பட்டது. படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த மேகி என்கிற மரகதவள்ளி கேரக்டர் தற்போது படத்தை புதிதாக பார்ப்பவர்களுக்கு அதிகமான விருப்பத்தை ஏற்படுத்திவிடும். ஐந்து நண்பர்கள் இணைந்து பெங்களூருவிற்கு போக, அங்கே ரம்யா கிருஷ்ணனால் ஏற்படும் சில பிரச்சினைகளை இந்தப் படம் கதைக்களமாக கொண்டிருந்தது.
படத்தின் துவக்கத்தில் இருந்து காமெடி கலாட்டாக்கள் துவங்கிவிடும். ஐந்து நண்பர்களும் இணைந்து கான்-காலில் பேசும் ஒரு காட்சியே இந்தப் படத்தின் சிறப்பிற்கு உதாரணமாக அமைந்தது. மணிவண்ணன், நாகேஷ் என ஒவ்வொரு கேரக்டரையும் சிறப்பாக்கியிருந்தார் கேஎஸ் ரவிக்குமார். கமல் -கிரேசி மோகன் கூட்டணியில் பல சிறப்பான படங்கள் வெளியான நிலையில், இந்தப் படம் கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது.
இந்தப் படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்திருந்த தேவயாணிக்கும் முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டிருந்தது. படத்தில் சிறிய கேரக்டர்களில்கூட பெரிய நடிகர்கள் நடித்து அசத்தியிருந்தனர். தேவா இசையில் படத்தின் பாடல்களும் படத்திற்கு சிறப்பை சேர்த்தது. குறிப்பாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிம்ரன் இடையில் போட்டி பாடலாக அமைந்த வந்தேன் வந்தேன் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் பாடலில் இருவரும் உண்மையிலேயே போட்டிப்போட்டுதான் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இந்தப் படத்தில் தன்னுடைய நடிப்பு குறித்து தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசியுள்ளார். அவரது நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இதற்கான ப்ரமோஷனுக்காக முன்னதாக பேசிய அவர், கமலுடன் நடிக்க வேண்டும் அது எந்த கேரக்டராக இருந்தாலும் பரவாயில்லை என்று தான் படத்தில் கால் கேர்ளாக நடிக்க தான் ஒப்புக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். படத்தில் தன்னுடைய கேரக்டர் எண்ட் ஆகவில்லை என்று கூறியுள்ள அவர், படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் ரஜினியுடன் நடித்திருந்த அவர், தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











