Jailer: வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும்.. மேடையில் ஓடிவந்து பேசிய ரம்யா கிருஷ்ணன்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது ஜெயிலர் படம். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ரஜினி, நெல்சன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினர்.
ரஜினியின் பேச்சில் குறுக்கிட்ட ரம்யா கிருஷ்ணன்: நடிகர்கள் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், வசந்த் ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என இந்திய அளவில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

முன்னதாக மாலத்தீவில் சுற்றுலா கொண்டாட்டத்தில் இருந்த ரஜினிகாந்த், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்தார். ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், நெல்சன் திலீப்குமார், தமன்னா உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். அனிருத்தின் இசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. ஹுக்கும் பாடலை மேடையில் பாடி அவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தமன்னா காவாலா பாடலுக்கு போட்ட ஆட்டம் ரசிகர்களை குஷியாக்கியது.
இந்த நிகழ்ச்சியில் துவக்கம் முதலே பல சுவாரஸ்யங்கள் நடைபெற்றன. மேடையில் ரஜினி குட்டிக் கதையையும் தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும் பேசி நிகழ்ச்சியை சிறப்பாக்கினார். அவர் பேச்சின் இடையில் மேடையிலிருந்து ஓடிவந்த ரம்யா கிருஷ்ணன், அவரை இடைமறித்து, அவரிடம் இருந்து மைக்கை வாங்கி பேசினார். படையப்பா டயலாக்கை அவர் தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்றபடி மாற்றிப் பேசினார். வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்கிட்டதான் இருக்கும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து இவை உன்கூடவே பிறந்தது. எங்கேயும் போகாது என்றும் அவர் பேசினார். இதைக்கேட்ட கூட்டத்தினர் ஆர்ப்பரித்தனர். கைத்தட்டல் அதிர்ந்தது. இதையடுத்து தன்னுடைய பேச்சை தொடர்ந்த ரஜினிகாந்த், தன்னுடைய குடிப்பழக்கம் உள்ளிட்டவை குறித்து பேசி, ரசிகர்களுக்கும் சில அறிவுறுத்தல்களை செய்தார். எப்போதாவது மகிழ்ச்சியாக இருக்கும்போது மட்டும் இந்தப் பழக்கத்தை மேற்கொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தற்போது ஜெயிலர் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றுள்ள நிலையில், அடுத்த வாரத்தில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அவரது கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், விஜய்யுடன் அவர் இணைந்திருந்த பீஸ்ட் படம் சொதப்பியது. இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தை அதிகமாக எதிர்பார்த்துள்ளார் நெல்சன்.


Click it and Unblock the Notifications











