ஜில்லுன்னு நீச்சல் குளத்தில்.. ஜிவ்வுன்னு ஒரு போஸ்.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்
சென்னை: படையப்பாவில் நீலம்பரி, பாகுபலியில் ராஜமாதா சிவகாமி என அழுத்தமான கதாபாத்திரங்களை அசால்ட்டாக செய்து பட்டையை கிளப்பியவர் ரம்யா கிருஷ்ணன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தனது 15வது வயது முதல் நடிக்கத் தொடங்கிய ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து நடித்து, இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பெயர் சொல்லவில்லை
வெள்ளை மனசு திரைப்படத்தில் ஒய்.ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்தார். அதுவே அவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் ஆகும். இருப்பினும் அப்படம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமையவில்லை. அதையடுத்து, படிக்காதவன், முதல்வசந்தம் என கிடைத்த வாய்ப்பில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

பரிச்சியமான முகம்
சிகரம் திரைப்படத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தை கையில் எடுத்து நடித்திருப்பார். இந்த துணிச்சலான கதாபாத்திரம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான வானமே எல்லை திரைப்படத்தில் 5 பேரில் ஒருவராக நடித்து இருப்பார். இந்தப்படம் வெற்றி பெற்று ரம்யா கிருஷ்ணனின் முகம் அனைவருக்கும் பரிச்சயமான முகமாக மாறியது.

மனம் தொட்ட அம்மன்
இதைத்தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்திலும் தனது கால் தடத்தை பதித்தார். தெலுங்கில் இவர் நடித்த அன்னமய்யா திரைப்படம் தேசிய விருதைப்பெற்றது. இதைத்தொடர்ந்து தெலுங்குத் திரைத்துறையில் கொடி கட்டிப்பறந்த ரம்யாகிருஷ்ணன் அம்மன் திரைப்படத்தில் நடித்தார் இந்தப்படமும் ஏகத்திற்கும் ஹிட்டடித்து. அம்மன் இப்படித்தான் இருப்பார்களா என அனைவரையும் வாய் பிளக்க வைத்தது. கன கச்சிதமாக பொருந்திய அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க இவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

திமிர் பிடித்த பெண்
மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான படையப்பாவில் பணக்கார திமிர் பிடித்த பெண்ணாக நடித்து இருப்பார் ரம்யா கிருஷ்ணன்.இந்தப்படம் வெற்றிப்பெற நீலம்பரி கதாபாத்திரமும், ரம்யாபாண்டியனின் நடிப்பும் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
Recommended Video

கம்பீரமான பெண்ணாக
பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார் என்பதை விட ராஜமாத சிவகாமி தேவியாக வாழ்ந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு வீரமும், கம்பீரமும் நிறைந்த கதாபாத்திரத்தை அசால்ட்டாக செய்து அனைவரின் மனதிலும் ராஜமாதாவாக நிலைத்து இருக்கிறார்.

கூல் போட்டோ
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் தற்போது நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தலையை மட்டுமே வெளியில் நீட்டி, கூலாக கூலிங் கிளாஸ் போட்டு பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications