பிங்க் நிற உடையில்.. க்யூட் க்யூட் ரியாக்சன்.. ரம்யா நம்பீசனின் பிக்ஸ்!
சென்னை : நடிகை ரம்யா நம்பீசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தங்களின் திறமையை வைத்தும், வசீகரத்தை வைத்தும் பல ரசிகர்களை சேர்த்துள்ளனர். அது போல் அவர்களின் தோற்றம் சில நேரம் ஒல்லியாக இருந்தாலும் சரி குஷ்பு போல் இருந்தாலும் சரி கண்டிப்பாக ரசிக்கப்படுவார்கள்.

இலியானா போன்றவர்கள் துரும்பாக இருந்தாலும் அவர்களின் வசீகரம் நம்மை கவர்ந்து விடும், ஹன்சிகா போன்றவர்கள் தலதலவென இருந்தாலும் அவர்களின் வசீகரம் ஆளை மயக்கி விடும். அந்த வரிசையில் நடிகை ரம்யா நம்பீசனும் வருவார். அழகான முகம், ஹோம்லி லுக் என அடுக்கி கொண்டே போகலாம்.
மலையாள சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். குள்ளநரி கூட்டம், சேதுபதி, பீட்ஸா போன்ற படங்களில் அனைவரும் பாராட்டும் விதமாக நடித்தார். நடிப்பது மட்டுமின்றி 26 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார்.
இவர் ஆரம்ப காலங்களில் குழந்தை கதாபாத்திரமாக மலையாளத்தில் நடித்துள்ளார். அத்துடன் தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் ஆரம்ப காலத்தில் தியேட்டர் ஆர்டிஸ்டாக இருந்தார்.
லாக்டவுன் நேரத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பல போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் தற்போது, வெளியிட்ட புகைப்படம் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அதில் பிங்க் கலர் ட்ரெஸ் அணிந்து அழகான காதணியோடு க்யூட் க்யூட் ரியாக்சனுடன் வித வித பல போஸ் கொடுத்திருக்கிறார். இதற்கு, பல ரசிகர்கள் இந்த ட்ரெஸ் உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கிறது. அதுவும் இந்த பிங்க் நிறம் உங்களுக்கு எடுப்பாக இருக்கு என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











