கறுப்பு நிற ஹாட் உடையில் கலக்கல் போட்டோஷூட்..முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ரம்யா பாண்டியன்!

சென்னை : நடித்தது ஓரிரு திரைப்படங்கள் மட்டுமே என்றாலும் முன்னணி நடிகைகளுக்கு நிகராக அதிக ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளவர் நடிகை ரம்யா பாண்டியன்.

ஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமான இவர் மக்கள் மத்தியில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் நெருக்கமானார்.

திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலமும் ரசிகர்களை நாளுக்கு நாள் அதிகமாக பெற்று வரும் ரம்யா பாண்டியன் இப்பொழுது அசத்தலான போட்டோஷூட்டில் ஆர்ப்பரித்து வைக்கிறார்.

இந்தியிலும்

இந்தியிலும்

இணைந்த கைகள், ராஜமுத்திரை, தாயகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகர் அருண்பாண்டியன், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் சில திரைப்படத்தில் நடித்து பிரபலமாக உள்ளார்.

உறவுக்கார பெண்

உறவுக்கார பெண்

நடிகராக மட்டுமல்லாமல் அங்காடித்தெரு, அனேகன், வில்லு, பேராண்மை உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் அருண்பாண்டியனின் நெருங்கிய உறவுக்கார பெண்ணான நடிகை ரம்யா பாண்டியன் இப்பொழுது தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டு பிரபலமான கதாநாயகியாக வலம் வருகிறார்.

முன்னணி நடிகைகளுக்கு டஃப்

முன்னணி நடிகைகளுக்கு டஃப்

ஆண் தேவதை ஜோக்கர் உள்ளிட்ட தரமான திரைப்படங்களில் நடித்து உள்ள ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெரும் ரசிகர்களை கவர்ந்து இப்பொழுது தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

ஒப்பந்தமாகியுள்ளார்

ஒப்பந்தமாகியுள்ளார்

இந்நிலையில் அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகி வரும் இவர் இப்பொழுது சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றிலும், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் ஒரு திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 ரசிகர்களை மகிழ்வித்து

ரசிகர்களை மகிழ்வித்து

எனினும் இன்று வரை படப்பிடிப்புகள் சரியான முறையில் தொடங்கப்படாத காரணத்தினால் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து மகிழ்வித்து வரும் ரம்யா இப்பொழுது முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வேற லெவலில் போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

Recommended Video

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் மீனாவிற்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளதா ?
கொல மாஸாக

கொல மாஸாக

அந்த வகையில் இப்போது எடுத்துள்ள போட்டோஷூட் ஒன்றில் பிளாக் அண்ட் பிளாக்கில் ஃபிட்டான உடையில் ஆக்சன் ஹீரோயினி போல செம ஸ்டைலிஷாக இதுவரை கண்டிராத ரம்யா பாண்டியனாக கொல மாஸாக எடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை துவம்சம் செய்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X