டைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன்… திணரும் சிங்கிள்ஸ் !
சென்னை : போட்டோஷூட் புகழ் ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டான பேண்ட் போட்டுக்கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார்.
இப்புகைப்படத்திற்கு ஏற்றவாறு ஒரு சூப்பரான கேப்ஷனும் கொடுத்துள்ளார்.
இந்த படத்தை ரம்யா பாண்டியன் பகிர்ந்த சில மணிநேரத்திலேயே ஏகப்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

சுமாரான வரவேற்பு
ராஜு முருகன் இயக்கிய உருவான 'ஜோக்கர்' திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் அறிமுகமானார், அதில் குரு சோமசுந்தரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை அடுத்து, 'ஆண் தேவதை' திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றன. இருப்பினும் அவருக்கு படவாய்ப்புகள் சரியாக அமையவில்லை.

வைரலானது
இதையடுத்து, சேலையில் கச்சிதமாக இடை தெரிய இவர் மேற்கொண்ட மொட்டைமாடி போட்டோஷூட் மிகப்பெரிய அளவில் வைரலாகி ரம்யா பாண்டியனுக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டத்தை அவருக்கு பெற்றுத்தந்தது. இதன் பின் விஜய்டிவியில் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் நீதியாகவும், குக் வித கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்கு இளைஞர்களின் கனவு ராணியானார்.

இறுதியில் வெளியேற்றப்பட்டார்
இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை அடுத்து பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த இல்லத்தில் அவ்வப்போது சில சலசலப்பில் சிக்கினார். மேலும், பல டாஸ்களில் வெற்றிபெற்று இறுதிவரை கடுமையாக போராடினார். ஆனால், இறுதிக்கு போட்டிக்கு ஒரு நாள் முன் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

டைட்டான பேண்ட்
கவர்ச்சி மற்றும் ஹோம்லி லுக்கில் சேலையில் அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். தற்போது இவர், லைட் டிசைனர் டாப் மற்றும் வெள்ளை நிறத்தில் இறுக்கமான ஹிப் பேண்ட் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக தன்னம்பிக்கை ஒரு சூப்பர் சக்தி என்று பதிவிட்டுள்ளா. இந்த புகைப்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Recommended Video

படத்தில் ஒப்பந்தம்
சூரியாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் வாணி போஜன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில நடிக்க உள்ளார். மற்றொரு படத்திலும் இவர் ஒப்பந்தமானதாக கூறப்படுகிறது இருப்பினும் அந்த தகவல் உறுதிபடுத்தப்படவில்லை.


Click it and Unblock the Notifications