என்னம்மா.. இப்படி இறங்கிட்டீங்க.. கிளாமரில் குதித்த நடிகை ரம்யா பாண்டியன்.. வேற லெவல் போட்டோ ஷூட்!
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.
டம்மி டப்பாசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஆண் தேவதை படத்தில் நடித்தார் ரம்யா பாண்டியன். அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் இறங்கினார் ரம்யா பாண்டியன்.

தொப்புளை காட்டி
தொப்புளை காட்டி அவர் நடத்திய போட்டோ ஷூட் பெரும் ரீச்சானது. இதன் மூலம் இன்னும் பிரபலமான ரம்யா பாண்டியனுக்கு சின்னத்திரையில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் சீசன் 4
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் ரம்யா பாண்டியன். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார் ரம்யா.

திட்டி தீர்த்த ரசிகர்கள்
இதில் சக போட்டியாளரான ஆரியை எப்போதும் குறை சொல்லி விளையாடியதால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். விஷம், நரி என கண்டப்படி திட்டி தீர்த்தனர் ரசிகர்கள்.

ரம்யா பாண்டியன் போட்டோஸ்
இதனை தொடர்ந்து சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் படத்தில் ஒப்பந்தமானார் ரம்யா பாண்டியன். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

திணறவிட்ட போட்டோஸ்
யோகா தினத்தை முன்னிட்டு பீச்சில் அவர் செய்த யோகா போஸ்கள் இணையத்தை திணறவிட்டன. இந்நிலையில் மேலும் சில போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ரம்யா பாண்டியன்.

கிளாமர் போஸ்
கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் கவுன் அணிந்துள்ள ரம்யா பாண்டியன் தரையில் சப்பளம் போட்டு அமர்ந்துள்ளார். மேலும் முழு கையையும் தொடையைய்ம பளீச்சென காட்டியுள்ளார்.

வாவ் சொல்லும் ஃபேன்ஸ்
கிறங்க வைக்கும் பார்வையில் ஃபிரி ஹேர் விட்டு திணறடித்துள்ளார். நடிகை ரம்யா பாண்டியனின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.

குவியும் லைக்ஸ்
ரம்யா பாண்டியனின் இந்த கிளாமர் போட்டோக்கள் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது. லைக்ஸ்களையும் குவித்து வருகிறது ரம்யா பாண்டியனின் இந்த போட்டோ.


Click it and Unblock the Notifications











