Ramya pandian: காதலரை மணந்தார் நடிகை ரம்யா பாண்டியன்.. குவியும் வாழ்த்து!
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன், யோகா மாஸ்டரை காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இன்று இருவருக்கும் ரிஷிகேஷில் திருமணம் நடந்துள்ளது. இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து பலரும் ரம்யாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
ஒரே ஒரு மொட்டைமாடி போட்டோஷூட் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால், இவர் மற்ற நடிகைகளைப்போல போட்டோஷுட்டுக்காக பணத்தை செலவு செய்யாமல், மிகவும் சிக்கனமாக மொட்டைமாடியிலே இடையழகை காட்டி மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். இதைத்தொடர்ந்து தனது ரசிகர்களுக்காகவே விதவிதமான போட்டோக்களை பகிர்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

நடிகை ரம்யா பாண்டியன்: பிரபலமான கையோடு ஜோக்கர், ஆண்தேவதை, மம்மூட்டியுடன் மாலைநேரத்து மயக்கம் போன்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால், எந்த படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவு பெயரை பெற்றுத்தரவில்லை. இதையடுத்து, விஜய் டிவியில் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியல் நடுவராக இருந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விதவிதமாக சமைத்தார். தற்போது ரம்யா பாண்டியனின் கைவசம் இடும்பன்காரி என்ற திரைப்படம் மட்டுமே உள்ளது.

காதலர் லோவல் தவான்: நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தீபாவளி அன்று இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோடிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா பாண்டியன் வெளியிட்டு இருந்தார். ரம்யா பாண்டியன் யோகா பயிற்சிக்கு சென்ற போது, அங்கு யோகா மாஸ்டராக உள்ள லோவல் தவானுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறி உள்ளது.
காதல் திருமணம்: இந்நிலையில், இவர்களின் திருமணம் இன்று காலை ரிஷிகேஷ், கங்கை நதிக்கரையோரத்தில் உள்ள கோயிலில் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது இவர்களின் திருமண போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. போட்டோவை பார்த்த ரசிகர்கள் ரம்யாவிற்கு வாழ்த்துக்களை கூறிவிருகின்றனர். இவர்களின் திருமண வரவேற்பு நவம்பர் 15 அன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











