கணவருடன் ஹல்தி கொண்டாட்டம்.. வீடியோவை வெளியிட்ட ரம்யா பாண்டியன்..யாரெல்லாம் வந்தாங்க தெரியுமா?

சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் கடந்த 8ந் தேதி தன்னுடைய காதலர் லோவல் தவானை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையோரம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமண வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்த ரம்யா பாண்டியன் தற்போது, ஹல்தி கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பிரபல இயக்குநரும் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ரம்யா பாண்டியன். ஆவார். சினிமா குடும்பத்திலிருந்து சினிமாவுக்குள் வந்திருந்தாலும் இவரால் பெரிதாக படங்களில் பிரகாசிக்க முடியிவல்லை. இதனால், இன்ஸ்டாகிராமில் தனது இடையழகை காட்டி போட்டோவை வெளியிட்டு பிரபலமானார். இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகியதைத் தொடர்ந்து அடுத்தடுத்து கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துவந்தார்.

ramya pandian lovel dhawan haldi

இதன் பலனாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, அதில் சிறப்பாக விளையாடின ரம்யாவிற்கு ரசிகர்கள் விஷபாட்டில் என்று பெயர் வைத்தனர். அந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டில் தந்திரமாக இருந்தார் ரம்யா பாண்டியன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த ரம்யாவிற்கு சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பேசப்பட்ட போதும் அடுத்தடுத்து படவாய்ப்பு வரவில்லை.

இதைத்தொடர்ந்து,மலையாளத்தில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்தார். தற்போது, ரம்யா பாண்டியனின் கைவசம் இடும்பன்காரி என்கிற படம் மட்டுமே கைவசம் உள்ளது.

யோகாவில் ஈடுபடு கொண்ட ரம்யா பாண்டியனுக்கு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் லோவல் தவானுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறி உள்ளது. இதையடுத்து இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் திருமணம் மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஹல்தி வீடியோ: இந்நிலையில், ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் ஹல்தி கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் மஞ்சள் காட்டு மைனாவாக மாறி வைப் செய்திருந்தார். மேலும் அந்த வீடியோவில் ரம்யா பாண்டியனுக்கு சித்தப்பா அருண் பாண்டியன் மஞ்சள் பூசி அழகுபார்த்துள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் ரம்யா பாண்டியன் மஞ்சள் நிற உடையில் கூலிங் கிளாஸ்போட்டுக்கொண்டு அழகாக இருக்கிறார். இந்த வீடியோ, இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X