திருமணத்திற்கு பின் தனியாக ஊர் சுற்றும் ரம்யா பாண்டியன்.. இது என்ன பழக்கமோ கடுப்பான பேன்ஸ்!
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய காதலர் லோவல் தவானை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையோரம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, பாங்காக் சென்று இருக்கும் ரம்யா பாண்டியன், தனியாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இயக்குநரும் நடிகருமான அருண் பாண்டியனின் அண்ணன் மகளான ரம்யா பாண்டியன். டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சினிமா குடும்பத்திலிருந்து சினிமாவுக்குள் வந்திருந்தாலும் இவரால் பெரிதாக படங்களில் பிரகாசிக்க முடியவில்லை. இதனால், இன்ஸ்டாகிராமில் தனது இடையழகை காட்டி போட்டோவை வெளியிட்டு இளசுகள் மனதில் இடம்பிடித்தார். இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகியதைத் தொடர்ந்து அடுத்தடுத்து கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துவந்தார்.

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியனுக்கு சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பேசப்பட்ட போதும் அடுத்தடுத்து படவாய்ப்பு வரவில்லை. இதைத்தொடர்ந்து, மலையாளத்தில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்தார். தற்போது, ரம்யா பாண்டியனின் கைவசம் இடும்பன்காரி என்கிற படம் மட்டுமே உள்ளது.

நடிகை ரம்யா பாண்டியன், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் லோவல் தவானுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியதைத் தொடர்ந்து, ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் திருமணம் மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இது என்ன பழக்கம்: தற்போது ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் பாங்காக்கில் இருக்கும் அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், திருமணத்திற்கு பின் தனியாக ஊர் சுற்றலாமா? இது என்ன பழக்கம், கணவர் எங்கே என்றும் சரமாரியான கேள்விகளை கேட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











