Ramya pandian: காதல் கணவருடன் ஹனிமூன் சென்ற ரம்யா பாண்டியன்.. எங்கேனு தெரியுமா?
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் தனது காதலர் லவல் தவோனை 8ந் தேதி திருமணம் செய்துகொண்டார். இவரின் திருமணம் கங்கை நதிக்கரையில் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தம்பதிகள் இருவரும் ஜாலியாக ஹனிமூனுக்கு சென்றுள்ளனர்.
நடிகை ரம்யா பாண்டியன் டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை படத்தில் நடித்துள்ளார். ஆனால், ரம்யா பாண்டியன் சினிமாவில் பிரபலமானதை விட, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் தான் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அந்த போட்டோஷூட்டில் க்யூட்டாக இருக்கும் இடை அழகை அப்பட்டமாக காட்டி லைக்குகளை பெற்றார். இதன் பலனாக ரம்யாவிற்கு சினிமா வாய்ப்பு வரவில்லை என்றாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்தது.

மாலை நேரத்து மயக்கம்: பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு சினிமா வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த ரம்யாவிற்கு சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பேசப்பட்ட போதும் அடுத்தடுத்து படவாய்ப்பு வரவில்லை. இதைத்தொடர்ந்து, மலையாளத்திலும் என்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன், மாலை நேரத்து மயக்கம் படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்தார். தற்போது, ரம்யா பாண்டியனின் கைவசம் இடும்பன்காரி என்கிற படம் மட்டுமே உள்ளது

காதலருடன் திருமணம்: இதையடுத்து, கடந்த மாதம் ரம்யா பாண்டியன் யோகா மாஸ்டரை காதலித்து வருவதாகவும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக செய்தி வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தீபாவளி அன்று தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தினார். இதையடுத்து, ரம்யா பாண்டியனுக்கும் அவரது காதலர் லவல் தவானுக்கும் நவம்பர் 8ந் தேதி ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் திருமணம் மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஹனிமூன் போட்டோஸ்: இந்நிலையில், ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் ஹனிமூன் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில் ரம்யாவின் காதல் கணவர் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்க, ரம்யா வெட்கத்தில் சிரிக்கிறார். இவர்கள் திருமண அதே ரிஷிகேஷிலேயே ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். தற்போது அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











