வாவ்… படுக்கை அறையில் அட்டகாசமாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!
சென்னை: இடையழகி ரம்யா பாண்டியன், தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் வீடியோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த பேன்ஸ் லைக்குகளை குவித்தது மட்டுமில்லாமல், அவரை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.
திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட இவர் கரிம தோட்டக்கலைகளில் ஆர்வம் காட்டக் கூடியவர். இவரது சித்தப்பா நடிகர் அருண் பாண்டியன் இதனை அடுத்து இவருக்கும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதை அடுத்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார். அப்போது இவருக்கு ஜோக்கர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதைத் தொடர்ந்து சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்ற போதும், ரம்யா பாண்டியனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படவாய்ப்பு வரவில்லை.

ரம்யா பாண்டியன்: இதைத் தொடர்ந்து படவாய்ப்பை பிடிக்க போட்டோஷூட்டில் கவனம் செலுத்தினார். இதில் கிடைத்த வரவேற்பை அடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் நடக்கும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 4-இல் கலந்து கொண்டு நான்காவது இடத்தை பிடித்துக் கொண்டார்.

இன்ஸ்டாகிராம் போஸ்ட்: மேலும் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக இருந்த ஷெல்லியுடன் இணைந்து மானே தேனே பொன் மானே என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படம் படு தோல்வியை சந்தித்ததால், ரசிகர்கள் மத்தியில் கண்டுகொள்ளப்படாத கதாநாயகியாக இருந்த ரம்யா பாண்டியன் தற்போது இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார். அந்த வகையில் படுக்கை அறையில் தனது செல்ல பிராணியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, அதனுடன் விதவிதமான போட்டோக்களையும் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன.




Click it and Unblock the Notifications











