செமயோ செம.. பத்து பொருத்தமும் பக்காவா இருக்கே.. ரம்யா பாண்டியனை பங்கம் செய்த மீம் கிரியேட்டர்ஸ்!
சென்னை: ரம்யா பாண்டியன் சாப்பிட்டுக் கொண்டே சண்டையை வேடிக்கை பார்க்கும் காட்சியை வைத்து மரண பங்கம் செய்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
Recommended Video
டம்மி பட்டாசு, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து குக் வித் கோமாளி உள்ளிட்ட சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
சேலை போட்டோ ஷுட்டுக்கள் மூலம் இடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார் நடிகை ரம்யா பாண்டியன்.

முதல் வார கேப்டன்
கடைசி வரை பிக்பாஸுக்கு வருவாரா என மாட்டாரா என எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கலக்கலாய் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரம்யா பாண்டியன் அங்கேயும் தொப்புளை காட்டி கிறங்க வைத்தார். முதல் வாரமே கேப்டனாய் தேர்வு செய்து ரம்யா பாண்டியனுக்கு கிரீடத்தை கொடுத்தார் பிக்பாஸ்.

ஒரிஜினாலிட்டி
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிக்பாஸ் வீடு நாளுக்கு நாள் கலவர பூமியாக மாறி வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்தின் ஒரிஜினாலிட்டி மெல்ல வெளி வரத் தொடங்கியுள்ளது.

மரியாதையை குறைத்து
கவனம் பெற வேண்டும் என்பதற்காக மூன்று நாட்களாய் அழுவது, சண்டை போடுவது, புலம்புவது என ரகம் ரகமாய் ட்ரிக்குகளை பயன்படுத்தி வருகிறார். குறிப்பாக ஒன்னும் இல்லாத விஷயத்தை பெரிய பிரச்சனையாக்கி தன் மீதுள்ள மரியாதையை குறைத்துக் கொண்டு வருகிறார் அனிதா சம்பத்.

அசைப்போட்டப்படி வேடிக்கை
இந்நிலையில் இன்றும் அப்படியான ஒரு ஏழரையை கூட்டியிருக்கிறார் அனிதா சம்பத். சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அனிதா சம்பத்திற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்று வரும் நிலையில் வீட்டின் கேப்டனான ரம்யா பாண்டியன் எதையோ அசை போட்டப்படி அதனை வேடிக்கை பார்க்கிறார்.

மீம் கிரியேட்டர்ஸ்
புரமோ வெளியான போதே அந்த ஸ்க்ரீன் ஷாட்டை வைத்து பங்கம் செய்தனர் நெட்டிசன்ஸ். இந்நிலையில் அதனை வைத்து மீம் போட்டு வேலையை காட்டியுள்ளனர் மீம் கிரியேட்டர்கள். அந்த மீமில் ரம்யா பாண்டியனை வடிவேலுவுடன் ஒப்பிட்டு வேற லெவலில் செய்துள்ளனர்.

பத்து பொருத்தமும் பக்கா
அதாவது, மூன்று போட்டோக்களுமே அப்படியே அத்தனை பொருத்தங்களுடன் வடிவேலு போட்டோவுடன் ஒத்துப் போகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், செமயோ செம பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு என கூறி வயிறு குலுங்க சிரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











