Ramya pandian: கார்ஜியஸ் லுக்கில் கவர்ந்திழுக்கும் ரம்யா பாண்டியன்..அசத்தல் போட்டோஸ்!
சென்னை: நடிகை ரம்யா பாண்டியனின் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள், செதுக்கி வைத்த சிலை என வர்ணித்து வருகின்றனர்.

எப்போதும் லைம் லைட்டில் இருந்து கொண்டிருக்க ஆசைப்படுபவர்கள் ஹீரோயின்கள். அதற்காக எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்.
பரபரப்பு பேட்டி கொடுப்பது, கருத்துச் சொல்கிறேன் என்று ட்விட்டரில் சர்ச்சையைக் கிளப்புவது கதாநாயகிகளின் தனி ஸ்டைல்.
ஏடா கூட கருத்து: நடிக்க பட வாய்ப்பு வந்தா வருது இல்லை என்றால், இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என்று சினிமாவை ஒப்புக்கு வைத்துக்கொண்டு ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள் சில ஹீரோயின்கள். அவர்களின் நோக்கம், தங்கள் அழகை வித்தியாசமான கோணங்களில் போட்டோ எடுத்து வெளியிடுவது. போட்டோக்களுக்கு ரசிகர்களின் ஏடா கூட கருத்து வந்தாலும் அதை கண்டுகொள்வதே இல்லை.

விதவிதமான போட்டோஷூட்: இந்த போட்டோ ஷூட்களுக்காக, தாராளமாக செலவு செய்யவும் அஞ்சாத ஹீரோயின்கள் ஏதாவது ஒரு வெளிநாட்டு கடற்கரையில் ஹாயாக அமர்ந்துகொண்டு, கடலை பார்த்தபடி, கடலலையில் அமர்ந்தபடி, மணலில் உருண்டபடி என விதவிதமான போட்டோ எடுத்துத் தள்ளுகின்றனர். இந்த வகை ஹீரோயின்கள் அதிகரித்துவிட்டார்கள்.
இடையழகி: அப்படி போட்டோஷூட் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால், இவர் மற்ற நடிகைகளைப்போல போட்டோஷுட்டுக்காக பணத்தை லட்சக்கணக்கில் செலவு செய்யாமல், மொட்டைமாடியில், வளைந்து நெளிந்து இருக்கும் தனது இடையழகை காட்டி போட்டோ எடுத்து பாப்புலர் ஆகிவிட்டார்.

நவராத்திரி ஸ்பெஷல்: பிரபலமான கையோடு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு பெயரை பெற்றுத்தராததால், போட்டோஷுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, ரம்யா பாண்டியன் நவராத்திரியை முன்னிட்டு சிவப்பு நிற உடையில் இருக்கும் அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் லைக்குகளை குவித்து வருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications











