இதை பார்த்தால் ஆரியே வருத்தப்படுவார்.. கதறும் ரம்யா பாண்டியனின் சகோதரர்.. பரபரப்பு அறிக்கை!

சென்னை: சமூக வலைதளங்களில் ரம்யா பாண்டியனை ரசிகர்கள் கடுமையாக விமர்சிப்பது குறித்து அவரது சகோதரர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டம்மி டப்பாசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

குக்கு வித் கோமாளி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் ரம்யா பாண்டியன். தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

ஆரியை அவமதித்து..

ஆரியை அவமதித்து..

இதில் ஆரம்பத்தில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக இருந்த ரம்யா பாண்டியன், சில வாரங்களுக்குப் பின் தனது ரசிகர்களை இழக்க தொடங்கிவிட்டார். குறிப்பாக ஆரியை அவமதிக்கும் வகையில் தரக்குறையவாக பேசினார் ரம்யா.

எல்லோரையும் கேள்வி கேட்டு

எல்லோரையும் கேள்வி கேட்டு

சம்யுக்தா, பாலாஜி மற்றும் ஆஜித்துடன் சேர்ந்து கொண்டும் ஆரிக்கு பின்னால் அவரை இழிவாக விமர்சித்து வருகிறார். எந்த பிரச்சனை என்றாலும் நான் கேள்வி கேட்பேன் என்று மூக்கை நுழைத்து தன்னை நியாயஸ்த்தி போன்று காட்டி வருகிறார்.

அதிகரிக்கும் வெறுப்பு

அதிகரிக்கும் வெறுப்பு

ஆரியுடன் யாராவது பிரச்சனை செய்தால், அதனை கொண்டாடும் வகையில் நமட்டு சிரிப்பு சிரித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் ரம்யா.

பரசு பாண்டியன் அறிக்கை

பரசு பாண்டியன் அறிக்கை

குறிப்பாக ஆரியை அவர் டார்கெட் பண்ணுவது ரசிகர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் அவரை விளாசி வருகின்றனர். இதனை பார்த்த ரம்யா பாண்டியனின் சகோதர் பரசு பாண்டியன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொச்சையாக விமர்சனம்

கொச்சையாக விமர்சனம்

அதில் அவர் கூறியிருப்பதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் தனது சகோதரி ரம்யா பாண்டியன் குறித்து ஆரியின் ரசிகர்கள், ஒரு பெண் போட்டியாளர் என்றும் பார்க்காமல் கொச்சையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்றும், தயவு செய்து இதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

ஆரியே வருத்தப்படுவார்

ஆரியே வருத்தப்படுவார்

ஆரி அவர்களே இதுபோன்ற விமர்சனங்களை பார்த்தால் தன்னுடைய ரசிகர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்களா? என்று வருத்தப்படுவார். ஆரி செய்த சாதனைகள் மற்றும் சமூக சேவை மதிப்புக்குரியது. அதனால் அவருடைய ரசிகர்களும் இது ஒரு கேம் ஷோ, விளையாட்டு போட்டி என்பதை மனதில் வைத்துக் கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்.

 திறமையான போட்டியாளர்

திறமையான போட்டியாளர்

திறமையான போட்டியாளர்களில் ஒருவர் வெல்லப் போகிறார் என்ற நிலையில் மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வது தேவையில்லாதது. நீங்கள் உங்கள் விருப்பத்துக்குரிய போட்டியாளர்கள் மீது அன்பு செலுத்துங்கள், ஆதரவு தாருங்கள் அது தவறில்லை. ஆனால் மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்ய வேண்டாம். இவ்வாறு ரம்யா பாண்டியனின் சகோதரர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X