ஜோக்கர் படத்தில் என் கேரக்டரை ரசித்துள்ளார் மம்மூட்டி சார்... பரவசத்தில் நடிகை ரம்யா பாண்டியன்!
சென்னை: மலையாள மெகா ஸ்டார் நடிகரான மம்மூட்டி ஜோக்கர் படத்தில் தன்னுடைய கேரக்டரை ரசித்தாக நடிகை ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்
சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் நடிகை ரம்யா பாண்டியன். இதில் சக போட்டியாளரான ஆரியை விமர்சித்து தனது பெயரை டேமேஜ் செய்து கொண்டார் நடிகை ரம்யா பாண்டியன்.

நண்பகல் நேரத்து மயக்கம்
இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் மலையாள மெகா ஸ்டாரான நடிகர் மம்மூட்டியுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடிக்கிறார் ரம்யா பாண்டியன். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தப் படத்தை லிஜோ ஜோஸ் பெலிசெரி இயக்குகிறார்.

உறுதிப்படுத்திய ரம்யா பாண்டியன்
இதனை நடிகை ரம்யா பாண்டியனும் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தினார். மெகாஸ்டார் மம்முட்டி மற்றும் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட இயக்குனர் லிஜோவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். மேலும் படக்குழுவுடன் இருக்கும் போட்டோக்களையும் பகிர்ந்து கொண்டார் ரம்யா பாண்டியன்.

என் நடிப்பு பிடித்துவிட்டது
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை ரம்யா பாண்டியன், "இயக்குனர் குழுவும் மம்முட்டி சாரும் ஜோக்கர் படத்தை பார்த்துள்ளார்கள். அந்த படத்தில் என்னுடைய நடிப்பு அவர்களுக்கு பிடித்துவிட்டது. என்னை அவருடைய படம் ஒன்றில் நடிக்க வைக்க வேண்டும் என்று மம்மூட்டி சார் சொன்னார்கள்.

உற்சாகமாக இருக்கிறேன்
இருப்பினும், புராஜெக்ட் நடக்கவில்லை. மீண்டும், பிக் பாஸ் தமிழில் அவருடைய குழு என்னைப் பார்த்தது. இறுதியில், நான் இந்த புராஜெட்டில் இணைந்துள்ளேன். மேலும் லிஜோ சார் மிகவும் செல்வாக்கு மிக்க இயக்குனர்களில் ஒருவர். அவரது ஜல்லிக்கட்டு ஆஸ்கர் விருதுக்கு சென்றது. அவரது மற்ற படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. நான் அவருடன் பணியாற்றப் போகிறேன் என்று தெரிந்ததிலிருந்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

நடித்துக் காட்டினார்
பொதுவாக ஒரு டீம்முடன் பழகுவதற்கு இரண்டு நாட்கள் ஆகும். இங்கேயும் அப்படித்தான் இருந்தது, அவருடைய நடிகர்களிடம் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பது எனக்குத் தெரியும். முதலில், அவர் எனக்கு நடித்துக் காட்டினார். பின்னர், அவர் உணர்ச்சிகளை விளக்கினார் மற்றும் அவரது நடிகர்களை இம்ப்ரூவ் செய்யுமாறு கூறினார்.

கனவு நனவானது..
அவர் எங்களிடம் பல மாதி நடிக்க சொல்லி கேட்டு எங்களிடமிருந்து சிறந்ததைப் பெறுவார். ஒரு காட்சிக்கு அவர் என்னைப் பாராட்டினார். இதானல் நான் உற்சாகமாக இருந்தேன் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை என்று கூறியுள்ளார் ரம்யா பாண்டியன். தொடர்ந்து பேசிய ரம்யா பாண்டியன், மேலும் மம்முட்டியுடன் நடிக்க வேண்டும்
என்ற தனது கனவு நனவாகியிருப்பதாகவும் கூறியுள்ளார் ரம்யா பாண்டியன்.

எளிமையானவர், இனிமையானவர்..
நான் அந்த டீம்முக்கு புதிது என்பதால் அமைதியாக இருந்தேன். பின்னர், மம்மூட்டி சார் என்னுடன் உரையாடலைத் தொடங்கினார். அவர் எளிமையானவர், இனிமையானவர், அடக்கமானவர். அவருக்கு நகைச்சுவை உணர்வும் அதிகம். படப்பிடிப்பின் போது நிறைய விஷயங்களைப் பேசினோம் என்று படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.


Click it and Unblock the Notifications











