அட நம்ம ரம்யா பாண்டியனா இது.. ஆளே அடையாளம் தெரியல!
சென்னை : சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரம்யா பாண்டியனுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.
திரைப்படங்களில் நடித்து கிடைக்காத பெயரும் புகழும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைக்க இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வருகிறார்.
மிகச்சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல் திறமைசாலியாகவும் இருக்கும் ரம்யா பாண்டியன் கல்லூரி படிக்கும்போது எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

மொட்டை மாடி போட்டோஷூட்
இப்பொழுது வளர்ந்து வரும் நடிகைகள் முன்னணி நடிகைகள் உட்பட பலரும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி இணையதளத்தில் கலவரத்தை உண்டாக்கி வரும் நிலையில் அதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளியாக இருந்தது நடிகை ரம்யா பாண்டியன். டம்மி டப்பாசு,ஆண்தேவதை, ஜோக்கர் மற்றும் ஒரு சில குறும்படங்கள் என ரம்யா பாண்டியன் நடித்திருந்தாலும் அதிலெல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோஷூட்டில் ஓவர் நைட்டில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறினார்.

காமெடி லூட்டி
சமூக வலைதளங்களில் ரம்யா பாண்டியனை பின்பற்றுவோரின் எண்ணிக்கை பலமடங்காக உயர விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சக போட்டியாளரான புகழுடன் இவர் அடித்த காமெடி லூட்டியை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க இந்த நிகழ்ச்சியும் மிகப்பெரிய வெற்றி பெற காரணமாக இருந்தனர்.

இறுதி கட்டத்தை நோக்கி
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படங்களிலும் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி நடித்து வந்த ரம்யா பாண்டியன், இப்பொழுது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸிஸ் போட்டியாளராக கலந்து கொண்டு சக போட்டியாளர்களை காட்டிலும் வலிமை மிக்க போட்டியாளராக இப்பொழுது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளார்.

கல்லூரி கால புகைப்படம்
பிக் பாஸில் இவர் விளையாடும் விளையாட்டிற்கு நேர்மறை விமர்சனங்கள் எதிர்மறை விமர்சனங்கள் என கலவையாக வந்து கொண்டிருக்க, பலரும் ரம்யா தான் வெற்றியாளராக வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டினுள் சென்ற பிறகு ரம்யாவின் பழைய புகைப்படங்கள் வீடியோக்கள் ஒவ்வொன்றாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வைரலாகி வர இப்பொழுது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ரம்யா பாண்டியன் இருக்கும் கல்லூரி கால புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











