‘’இந்தி திணிப்பை நிறுத்துங்கள்’’… அஜய் தேவ்கனுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை !
சென்னை : இந்தி தான் நமது தேசியமொழி என பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கூறியதற்கு, நடிகை சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவில் சில வருடங்களுக்கு ஒருமுறை, அடிக்கடி இந்தியின் மொழியின் மாயத்தோற்றம் வெளிவந்து ஆட்டம் போடும் அது தான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.
இந்தி மொழி குழப்பம் வருவது இது முதல்முறை பலமுறை குழப்பத்தில் இருந்து பல போராட்டங்களுக்கு பிறகு மீண்டு வந்திருக்கிறோம்.

இந்தி இனி தேசிய மொழி அல்ல
கேஜிஎஃப்-2 பட விழாவில் பேசிய, கன்னட நடிகர் கிச்சா சுதீப், இனிமேலும் இந்தி மொழியை தேசிய மொழி என சொல்ல வேண்டாம். ஒரு கன்னட படம் பான் இந்தியா படமாக எடுக்கப்பட்டது என்று எல்லோரும் கூறுகிறார்கள், ஆனால் ஒரு சிறிய திருத்தம், இந்தி இனி தேசிய மொழி அல்ல. பாலிவுட்டும் பல பான் இந்தியா திரைப்படங்களைத் தயாரிக்கிறது. அவை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடப்படுகின்றன. ஆனால் வெற்றி பெற போராடுகின்றன. இன்று நாம் எங்கு வேண்டுமானாலும் ஓடக்கூடிய படங்களைத் தயாரித்து வருகிறோம் என்றார் சுதீப்.

இந்தி தான் தேசிய மொழி
அவருக்கு பதில் அளிக்கும் வகையில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், கிச்சா சுதீப்பை டேக் செய்து ஒரு ட்விட்டை போட்டுள்ளார். அதில், உங்களை பொறுத்தவரையில் இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் உங்கள் தாய் மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? எப்போதும் இந்தி தான் நமது தாய் மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும் என்று என்று பதிவிட்டு இருந்தார்.

யோசித்து பாருங்கள்
இதற்கு பதிலளித்துள்ள கிச்சா சுதீப், நீங்கள் இந்தியில் அனுப்பிய பதிவு எனக்கு புரிந்தது. நாங்கள் அனைவரும் இந்தி மொழியை நேசித்து கற்றுக்கொண்டோம். தவறொன்றும் இல்லை சார். ஆனால் உங்கள் கேள்விக்கு எனது பதிலை கன்னடத்தில் பதிவு செய்திருந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்து பாருங்கள் பதில் ட்விட் போட்டிருந்தார்.

இணையத்தில் பெரும் புயல்
இருபிரபலங்களின் கருத்து மோதல்கள் இணையத்தில் மிகப்பெரிய புயலை கிளப்பியது பல பிரபலங்களும் அஜய் தேவ்கன் கருத்துக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பல சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இந்தி திணிப்பை நிறுத்துங்கள்
இந்நிலையில் அஜய் தேவ்கனின் ட்வீட்டை டேக் செய்த, நடிகையும் அரசியல்வாதியுமான ரம்யா ஸ்பந்தனா, இல்லை - இந்தி நமது தேசிய மொழி அல்ல. அஜய் தேவ்கன். உங்கள் அறியாமை திகைப்பூட்டுகிறது. KGF, புஷ்பா மற்றும் RRR போன்ற படங்கள் இந்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. கலைக்கு மொழி தடை இல்லை. உங்கள் படங்களை நாங்கள் ரசிப்பது போல் எங்கள் படங்களையும் ரசியுங்கள் எனக் குறிப்பிட்டு, இந்தி திணிப்பை நிறுத்துங்கள் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











