Ramya :முழுமையாக பூங்குழலியாக மாறிய ரம்யா சுப்ரமணியம்.. க்யூட் போட்டோஸ்!
சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ள படம் பொன்னியின் செல்வன்.
மணிரத்னத்தின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை சர்வதேச அளவில் தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் நடிகர்கள், நடிகைகளும் திரையரங்குகளில் ரசிகர்களுடன் சென்று படம் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
பூங்குழலியாக மாறிய ரம்யா சுப்ரமணியம் : நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, விக்ரம், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன் 2 படம். இநத்ப் படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திக் கொடுத்த வரவேற்பு மற்றும் வசூலை தொடர்ந்து சில மாதங்களிலேயே படத்தின் இரண்டாவது பாகத்தையும் படக்குழுவினர் இன்றைய தினம் வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச அளவில் வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை கொடுத்துள்ளனர். முன்னதாக இந்தப் படத்திற்காக கடந்த இரு மாதங்களை கடந்து அதிகமான பிரமோஷன்களை படக்குழுவினர் கொடுத்துள்ளனர். படத்தின் முதல் பாகம் கொடுத்துள்ள சிறப்பான எதிர்பார்ப்பை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்திற்கான பிரமோஷன்களும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. மேலும் படத்தின் நடிகர், நடிகைகளும் பிரமோஷனல் டூரை சிறப்பாக மேற்கெண்டனர்.

சென்னையில் துவங்கிய இவர்களது பயணம், கோவை, டெல்லி, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்து, அவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் அவர்கள் கேள்விக்கு பதிலளித்தனர். இதில் பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து மட்டுமில்லாமல், அவர்களின் மற்ற படங்கள், சொந்த விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழகத்தில் பிரபல திரையரங்குகளில் படத்தின் நடிகர், நடிகைகள் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்து என்ஜாய் செய்துள்ளனர். அவர்களுடன் ரசிகர்களும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் அனைத்து கேரக்டர்களும் அமரர் கல்கியின் கேரக்டர்களை கண்முன்னே கொண்டுவரும் வகையில் சிறப்பான தேர்வாக அமைந்துள்ளது. அந்த கேரக்டர்களுக்கு அவர்கள் தங்களது உடல்மொழியால் சிறப்பான உருவம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் படத்தின் பூங்குழலி கேரக்டரை தனக்குள் கொண்டுவந்துள்ளார் பிரபல விஜே ரம்யா சுப்ரமணியன். இந்த நாவலை முதலில் படிக்கும்போது, இந்தக் கேரக்டர்தான் தன்னை மிகவும் பாதித்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











