Ramya: அந்த இடம் குறித்த மோசமான கமெண்ட்.. ரம்யா கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

சென்னை: பிரபல ஆங்கர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பயிற்சியாளர், யூடியூப் பிரபலம் என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் விஜே ரம்யா சுப்ரமணியன்.

பன்முகத் திறமை கொண்டவராக இருக்கும் ரம்யா, தன்னுடைய பிட்னசிலும் மிகுந்த அக்கறை கொண்டவர். தற்போது எடைகுறைப்பு பயிற்சியையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.

பல முன்னணி நடிகர்களின் இசை வெளியீடு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் ரம்யா.

Actress Ramya Subramanian harsh reply about the comment on breast size,

அந்த இடம் குறித்த கமெண்ட்டிற்கு கோபமாக பதிலடி கொடுத்த ரம்யா சுப்ரமணியன்: பிரபல சேனலில் விஜேவாக தன்னுடைய பயணத்தை துவங்கிய ரம்யா சுப்ரமணியன், தொடர்ந்து நடிகையாகவும் மாறியுள்ளார். பல முன்னணி நடிகர்களின் படங்களின் இசை வெளியீடு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். யூடியூபில் பிசியாக காணப்படும் ரம்யா சுப்ரமணியன், பிட்னசில் அதிக அக்கறை கொண்டவர். தன்னுடைய உடல் எடையை அதிகமான வொர்க் அவுட்கள் மற்றும் உணவின் மூலம் சிறப்பான வகையில் ஸ்லிம்மாக்கியுள்ளார்.

உடல் எடையை குறைக்கும்வகையில் பயிற்சிகளையும் நடத்தி வருகிறார். தன்னுடைய நடை, உடை, பாவனைகளையும் அதிகமான மாற்றங்களை காட்டி வருகிறார். தன்னுடைய உடை குறித்த தன்னுடைய கண்ணோட்டம் மாறியுள்ளதாகவும் தனக்கு பிடித்த உடையை அணியும் சுதந்திரம் தனக்கு உண்டு என்றும் சமீபத்திய பேட்டியில் இவர் போல்டாக பேசி வருகிறார். இத்தகைய கருத்துக்களை இவர் அவ்வப்போது தன்னுடைய யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார்.

Actress Ramya Subramanian harsh reply about the comment on breast size,

இந்நிலையில் அவரிடம் சமீபத்தில் அவரது அந்த இடம் குறித்து விமர்சிக்கப்பட்டிருந்தது. அதற்கு வீடியோ மூலம் பதிலளித்துள்ள ரம்யா சுப்ரமணியன், தன்னுடைய தற்போதைய உடலமைப்பை பெற தான் மிகுதியான வொர்க் அவுட் செய்ததாகவும், தற்போதுள்ள தன்னுடைய உடலமைப்பு குறித்து தான் மிகுந்த உற்சாகமாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களின் உடல் குறித்த கமெண்ட்களை செய்வது குறித்து அவர் பேசியுள்ளார்.

அவ்வாறு கமெண்ட் செய்பவர்கள், தங்களின் வாழ்க்கை முறை குறித்து மீண்டும் யோசிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். நீங்கள் மட்டும் சிரித்தால் அது ஜோக் இல்லை என்று கூறியுள்ள ரம்யா, மேலும் ஒருவர் உடல் குறித்த விமர்சனம், None of your business என்றும் கூறியுள்ளார். ஒருவர் தன்னுடைய உடல் குறித்து நம்பிக்கை இல்லாததையே இதுபோன்ற விமர்சனங்கள் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Actress Ramya Subramanian harsh reply about the comment on breast size,

முன்னதாக இதுபோன்ற கமெண்ட்கள் குறித்து தான் மிகுந்த கவலை கொள்ளும் நபராக இருந்ததாகவும் தற்போது அந்த மனநிலையை தான் கடந்து எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் தனக்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். தொடர்ந்து பல்வேறு வீடியோக்களை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அவரது பல வீடியோக்கள் மற்றவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X