சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கும் ராஜமாதா.. சுவாரசிய தகவல்!

சென்னை : நடிகர் சிரஞ்சீவி இப்பொழுது மலையாள திரைப்படமான லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்

தெலுங்கில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் இந்த படத்திற்கு காட்பாதர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது இப்படத்தில் வலிமை மிகுந்த மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்திற்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

லூசிஃபர் தெலுங்கு ரீமேக்

லூசிஃபர் தெலுங்கு ரீமேக்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் சிரஞ்சீவி அடுத்தடுத்து ரீமேக் படங்களின் நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே அஜித்குமாரின் வேதாளம் படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த லூசிஃபர் திரைப்படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கி இருந்தார்

பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமானார்

பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமானார்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள பிரித்விராஜ் லூசிஃபர் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் முதல் படத்திலேயே எதிர்பார்த்ததை விடவும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிரித்விராஜ் அதைத் தொடர்ந்து மோகன்லால் கூட்டணியில் மீண்டும் இணைந்து ப்ரோ டாடி என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும்

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும்

லூசிஃபர் மலையாளத்தில் வெற்றி பெற்ற உடனேயே தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் உருவாவதாக கூறப்பட்டது அதன் முதற்கட்டமாக தெலுங்கு ரீமேக் புயல் வேகத்தில் தயாராகி வருகிறது. சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். மேலும் எஸ் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்திற்கு

மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்திற்கு

லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கிற்கு "காட்பாதர்" என டைட்டில் வைக்கப்பட்டிருக்க இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. அதை அடுத்து படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது இந்த நிலையில் இப்படத்தில் வலிமை மிகுந்த கதாபாத்திரமாக மஞ்சுவாரியர் கதாபாத்திரம் இருக்கும். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்திற்கு தெலுங்கில் நயன்தாரா நடிப்பார் என சில செய்திகள் வெளிவந்தது ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

ரம்யா கிருஷ்ணன் தங்கையாக

ரம்யா கிருஷ்ணன் தங்கையாக

இந்தநிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி ராஜமாதாவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் இப்பொழுது மஞ்சுவாரியர் நடித்த தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் சிறப்பு தோற்றத்தில் தோன்ற உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X