ச்சீ.. இதெல்லாம் ஒரு பொழப்பா.. உன் வயசு என்ன.. டாக்டர் காந்தராஜை விளாசிய நடிகை!

சென்னை: பெண் திரைப்படக்கலைஞர்கள் வாய்ப்புக்காக பாலியல் ரீதியிலான அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்கிறார்கள் என்றும், பாலியல் சமரசம் செய்தே ஆடம்பரமான, வசதியான, வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும், நடிகைகள் குறித்து படுமோசமாக பேசி இருந்தார் டாக்டர் காந்தராஜ், இதற்கு பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சீரியல் நடிகை ஒருவர் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மலையாள சினிமாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் புயலை கிளப்பியது. இதுகுறித்து பேசிய ராதிகா சரத்குமார், கேரவனில் நடிகை உடைமாற்றுவதை கேமரா மூலம் சிலர் பார்த்ததாகவும், அப்போது தான் கண்டித்ததாகவும் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் பல நடிகைகளும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டது குறித்து புகார் அளித்து வந்தனர். இதுகுறித்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த டாக்டர் காந்தராஜ், பிரபலமாக வேண்டும் என்பதற்காக அனைத்திற்கும் ஒகே சொல்லிவிட்டு இப்போது புகார் அளிக்கின்றனர்.

doctor kantharaj ranjana nachiyaar hema committee

டாக்டர் காந்தராஜ் சர்ச்சை பேச்சு: இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. ஒரு நடிகை படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முதலில் மேக்கப் மேன் சொல்வதை செய்ய வேண்டும். அதன் பின் வளர்ந்த பிறகு இயக்குநர், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர் என பல பேருக்கு பணிந்து போக வேண்டும் என நடிகைகள் குறித்து மிகவும் ஆபாசமாக பேசி இருந்தார்.

ரோகிணி புகார்: இதுகுறித்து, நடிகையும், நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவருமான ரோகிணி சென்னை காவல் ஆணையரகத்தில் இணையம் வழியாகப் புகார் அளித்துள்ளார். அதில், செப்டம்பர் 7-ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில், பேசிய டாக்டர் காந்தராஜ், நடிகைகளை ஒட்டுமொத்தமாக கீழ்தரமாக பேசியதோடு அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளர்கள் என்பது போல பேசி உள்ளார். எனவே டாக்டர் காந்தராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காந்தராஜ் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

doctor kantharaj ranjana nachiyaar hema committee

ச்சீ... இதெல்லாம் பொழப்பா: டாக்டர் காந்தராஜ் மோசமாக பேசியது குறித்து துணை நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான ரஞ்சனா நாச்சியார், அவர் வயசுக்கு என்று ஒரு மரியாதை இருக்கு, அவருக்கு என்று ஒரு குடும்பம் இருக்கு, ஒரு நல்ல மனைவி இருந்தால் அவர் இப்படி பேசி இருப்பாரா? நல்ல தாய்க்கு பிறந்து இருந்தால் இப்படி பேசி இருக்க மாட்டார். தனக்கு என்று ஒரு குழந்தை இருக்கிறது, அதை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும், அதற்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என நினைப்பவன் எவனும் இப்படி ஆபாசமாக பேசமாட்டான்.

நடிகை ரஞ்சனா நாச்சியார்: இந்த நடிகை அப்படி, இந்த நடிகை நைட் பார்ட்டியில் அப்படி செய்தார் என்று சொல்லுகிறார். அப்போ, எல்லா இடத்திற்கும் அவர் போனாரா? போய் விளக்கு புடிச்சி பார்த்தாரா? யார், யார் எங்கே போகிறார்கள் என்று பார்ப்பது இவர் வேலையா. அடுத்தவர்களின் குடும்பத்தை பற்றி பேசுவது, நடிகை பற்றி பேசுவது இதுதான் உங்களுக்கு வேலையா? உங்க வேலை என்ன, அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவது எல்லாம் ஒரு பொழப்பா என டாக்டர் காந்தராஜை கடுமையாக தீட்டி தீர்த்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X