'அந்த வார்த்தையை எப்படி பயன்படுத்தலாம்..? பிரபல நடிகை ஆவேசம்.. நடிகர் மீது வழக்குத் தொடர முடிவு

By

சென்னை: தன்னைப் பற்றி தவறாக பேசியதாக நடிகர் மீது, பிரபல முன்னாள் ஹீரோயின் வழக்குத் தொடர இருக்கிறார்.

பிரபல முன்னாள் ஹீரோயின் ரஞ்சனி. பாரதிராஜா இயக்கிய முதல்மரியாதை படத்தில் அறிமுகமானவர் நடிகர்.

தொடர்ந்து கடலோர கவிதைகள், ஆயிரம் பூக்கள் மலரட்டும், மண்ணுக்குள் வைரம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ஆயுட்கால உறுப்பினர்

ஆயுட்கால உறுப்பினர்

மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ள இவர், டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த ரஞ்சனி, திருமணத்துக்குப் பிறகு கேரளாவில் செட்டிலாகிவிட்டார். வழக்கறிஞரான இவர், சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இவர் ஆயுட்கால உறுப்பினராக இருக்கிறார்.

வாட்சப் குரூப்

வாட்சப் குரூப்

ஆயுட்கால உறுப்பினர்களுக்கு நடிகர் சங்கம், தனியாக வாட்சப் குரூப் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகர், நடிகைகள், தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் நாசர், கார்த்தி, மனோபாலா உட்பட பலர் இந்த குரூப்பில் உள்ளனர். கொரோனா நிவாரண நிதி குறித்து இந்த குரூப்பில் சில விவாதங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

நாடக நடிகர்

நாடக நடிகர்

அப்போது, திருவண்ணாமலையை சேர்ந்த நாடக நடிகரான வாசுதேவன் பற்றி, நடிகை ரஞ்சனி இவர் நடிகரா? என்று கேட்டுள்ளார். இதையடுத்து அதற்குப் பதிலளித்த வாசுதேவன், 'நான் நடிகர்தான், ஆனால், உங்கள் தொழில் வேற' என்று கூறினாராம். அந்த 'தொழில்' என்ற வார்த்தை ரஞ்சனியை காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அந்த அர்த்தம்

அந்த அர்த்தம்

இதையடுத்து எப்படி இந்த வார்த்தையை பயன்படுத்தலாம் என்று அவர் ஆவேசப்பட்டார். நடிகை ரஞ்சனிக்கு ஆதரவாக சில நடிகர்கள் பேசினர். இதற்கு விளக்கம் அளித்த வாசுதேவன், 'நீங்கள் சினிமா நடிகர், நான் நாடக நடிகர். இரண்டு பேர் தொழிலும் வேறு' என்ற அர்த்தத்திலேயே அப்படிக் குறிப்பிட்டேன் என்றார்.

மன்னிப்புக் கேட்கணும்

மன்னிப்புக் கேட்கணும்

இதை ஏற்காத நடிகை ரஞ்சனி, தன்னை தவறாகப் பேசியதாகக் கூறி இதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கேட்டார். குரூப் அட்மினான நடிகர் நாசர், கார்த்தி உள்ளிட்டோரும் இதற்கு பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நடிகை ரஞ்சனி, வாசுதேவன் மீது வழக்குப் பதிவு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X