twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரம்மச்சாரி ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பதா?: நடிகை ரஞ்சனி

    By Siva
    |

    திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நடிகை ரஞ்சனி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பெண்கள் தரப்பில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்நிலையில் நடிகை ரஞ்சனியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

    [விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு!]

    சீராய்வு மனு

    சீராய்வு மனு

    வட இந்தியர்களுக்கு ஐயப்பனை பற்றியும், நம் பக்கத்து வழிபாட்டு முறைகள் பற்றியும் தெரியாது. அதனால் ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு வியப்பாக இல்லை. இது குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்கிறோம். நம் வழிபாட்டு முறைகள் பற்றி தெரிந்த ஒரு தென்னிந்திய நீதிபதியை சபரிமலை வழக்கை விசாரிக்கும் அமர்வில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

    பக்தர்கள்

    பக்தர்கள்

    ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து போராட வேண்டும். இல்லை என்றால் நம் கலாச்சாரமும், பாரம்பரியமும் அழிந்துவிடும். இந்த காரணத்திற்காக துவங்கப்பட்டுள்ள ரெடி டூ வெயிட் என்ற பிரச்சார இயக்கத்தில் நான் இணைகிறேன். நம் போன்ற பக்தர்களால் தான் நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காப்பாற்ற முடியும். இதில் பாலின பாகுபாடு என்ற பேச்சுக்கு இடம் இல்லை.

    பிரம்மச்சாரி

    பிரம்மச்சாரி

    கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கவே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.10 வயதிற்குட்பட்ட மற்றும் 50 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் சபரிமலை கோவிலுக்கு தாராளமாக வரட்டும். ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி கடவுள். யோக நிலையில் இருக்கும் அவரை தரிசிக்க ஆண்கள் விரதம் இருந்து, மனைவியுடன் நெருக்கமாக இல்லாமல் கட்டுப்பாட்டுடன் இருந்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது இளம் பெண்களால் கவனச் சிதறல் ஏற்பட்டு விடக் கூடாது என்று நினைத்து தான் பெரியோர்கள் இப்படி கட்டுப்பாடு விதித்துள்ளனர். பெரியோர்கள் விதித்துள்ளது கட்டுப்பாடு தானே தவிர தடை இல்லை என்றார் ரஞ்சனி.

    நவ்யா நாயர்

    நவ்யா நாயர்

    ரஞ்சனியை போன்றே நடிகை நவ்யா நாயரும் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன். ஆனால் சபரிமலையில் நடைமுறையில் உள்ள வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்பதே என் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Ranjini is against women of all ages allowed to visit Sabarimala temple.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X