17 வயதில் ஹீரோயின்.. விஜய்க்கு ஜோடி.. நித்யானந்தவுடன் கைலாசாவில் செட்டிலான ரஞ்சிதாவின் மறுபக்கம்!
சென்னை: மணியே மணிக்குயிலே... மாலையிளங்கதிரழகே என ஒரே பாடல் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட ரஞ்சிதா. 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தார். நித்யானந்தவுடனான சலசலப்புக்கு பின் சர்ச்சை நடிகையாக மாறிய ரஞ்சிதாவின் மறுபக்கத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நடிகை ரஞ்சிதா 1975ம் ஆண்டு பெங்களுரில் பிறந்தார். இவரின் உண்மையான பெயர் ஸ்ரீவள்ளி, இவருடைய அப்பா, புரோடக்ஷன் கம்பேனி ஒன்றில் மேனேஜராக இருந்தார். இவரது குடும்பம் சினிமா குடும்பம் என்பதால், இவருக்கு சினிமாவில் வருவதற்கு ஆர்வம் இருந்தது என்று சொல்லிவிட முடியாது. பெங்களுரில் படித்துக்கொண்டு இருந்த போது சட்டம் அல்லது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று, அதற்காக ஆர்வத்துடன் படித்துள்ளார் ரஞ்சிதா.

நடிகை ரஞ்சிதா: அப்போது தான் ரஞ்சிதாவிற்கு கடப்பா ரெட்டிமா என்கிற தெலுங்கு படத்தில் நடிக்க வீடு தேடி வாய்ப்பு வந்துள்ளது. நடித்து பார்க்கலாம். செட்டாகவில்லை என்றால், மீண்டும் படிக்கவே போய்விடலாம் என்ற பிளானுடன் நடிக்க வந்துள்ளார். ஆனால், ரஞ்சிதாவை சினிமா உலகம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று சிம்மாசனத்தில் ஏற்றியது. பாரதிராஜா இயக்கிய நாடோடி தென்றல் படத்தில், பூங்குருவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, முதல்மரியாதை பட ராதாவை நினைவு படுத்தினார். 17 வயதிலேயே அதுவும், முதல் படத்தில் ஒரு அழுத்தமான ரோலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
முன்னணி நடிகை: முதல் படத்திலேயே கதாநாயகியாக வலம் வந்த ரஞ்சிதாவிற்கு முதல் படமே பெயர் சொல்லும் படமாக அமைந்ததை அடுத்து, 1990 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ரஞ்சிதா. அதைத்தொடர்ந்து, ஜெய் ஹிந்த், அமைதிப்படை, தோழர் பாண்டியன், கருப்பு நிலா, கர்ணா, சின்ன வாத்தியார், மக்களாட்சி, பெரிய மருது, பொம்மலாட்டம் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் நடிக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஹிட்பாடல்கள்: ரஞ்சிதா நடித்த படங்கள் ஒரு பக்கம் வெற்றிவாகை சூட, இவர் நடித்த படத்தின் பாடல் இவரை உச்சாணி கொம்பில் ஏற்றிவிட்டது எனலாம், முத்தம் தர ஏத்த இடம் பாடலும்... மலரே மவுனமா பாடலும்... அமைதிப்படை படத்தில் வரும் சொல்லிவிடு வெள்ளிநிலவே போன்ற பாடல்கள் இன்றை இளசுகளும் முணுமுணுக்கும் பாடலாகவே இருக்கிறது. ஹோம்லிக்கு ஹோம்லி, கிளாமருக்கு கிளாமர் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் மிரட்டி விடுவார் ரஞ்சிதா.
காதல் திருமணம்: தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரு ரவுண்டு வந்த ரஞ்சிதா, ராகேஷ் மேனன் என்கி ஆர்மி அதிகாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவர், குழந்தை என சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ரஞ்சிதா, திடீரென, விஜய் நடித்த வில்லு படத்தில், பிளாஷ் பேக்கில் கதையில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சர்ச்சை நடிகை: இப்படி தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்த ரஞ்சிதா ஒரே நைட்டில் உலகமே விமர்சனம் செய்யும் நடிகையாக மாறினார். நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா தனிஅறையில் இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரஞ்சிதாவின் மொத்த பெயரையும் டேமேஜ் ஆக்கியது. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என ரஞ்சிதா கதறிய போதும், அது ரஞ்சிதா தான்.. நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தான் ரஞ்சிதா இருக்கிறார் என பல மோசமான விமர்சனத்திற்கு ஆளானார் ரஞ்சிதா. அதன் பின் வீட்டை விட்டே வெளியே வராமல் இருந்தார்.
கைலாசாவின் பிரதமர்: நித்தி சர்ச்சையில் சிக்கிய ரஞ்சிதா, தனது காதல் கணவரையும் பிரிந்து நிற்கதியாக இருந்த போது, அவருக்கு கை கொடுத்து காப்பாற்றியது அவரின் புத்தகம் வாசிக்கும் பழக்கமும் ஆன்மீகமும் தான். நித்யானந்தாவால் பல பிரச்சனைகள், பல அவமானத்தை சந்தித்த ரஞ்சிதா, இப்போதும், நான் நித்யானந்தாவின் பக்தை தான் என்றும், இனியும் அவருடன் சேர்ந்து ஆன்மீக சேவை செய்வேன் என்று தைரியமாக சொன்னார் ரஞ்சிதா. தற்போது நித்யானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டின் பிரதமராக ரஞ்சிதா இருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











