மயக்க மருந்து கொடுத்து பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய அதிகாரி மீது புகார்!
பெங்களூரு: மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டுவதாக, அதிகாரி ஒருவர் மீது நடிகை ஒருவர் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகின்றன.
சினிமா நடிகைகளுக்கும் இது அதிகமாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

நடிகை பூர்ணா
தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துவரும் நடிகை பூர்ணாவின் புகார் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணம் செய்துகொள்வதாக அவரிடம் பழகி பணம் பறிக்க ஒரு கும்பல் முயன்றுள்ளது. இதுபற்றி அவரது அம்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த கும்பலை கைது செய்துள்ளனர்.

தமிழ், கன்னட படங்கள்
அந்தக் கும்பலிடம் மேலும் ஒரு நடிகையும் சில மாடல்களும் ஏமாந்துள்ளனர். இன்னொரு நடிகையையும் அந்த கும்பல் மடக்க முயன்றுள்ள சமீபத்தில் தெரியவந்தது. இந்நிலையில், தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் நடிகை அவர். சில படங்களில் நடித்துள்ள அவரை, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தது.

பிறந்த நாள் பார்ட்டி
இதனால் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மோகித் என்பவர் நடிகைக்கு நன்றாகப் பழக்கமானார். இந்நிலையில் தனது பிறந்த நாள் பார்ட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று கடந்த வருடம் ஜூன் மாதம், நடிகையை அழைத்திருக்கிறார், அந்த அதிகாரி. நம்பிச் சென்ற அவரை, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

போனில் வீடியோ
பின்னர் அதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டார். அந்த வீடியோவைக் காட்டி, மிரட்டிப் பணம் பறித்து வந்துள்ளார். தான் கேட்கும் போதெல்லாம் பணம் தரவில்லை என்றால், இந்த வீடியோவை இணையதளத்தில் பரப்பி விடுவேன் என்று கொடூரமாக மிரட்டி இருக்கிறார். பயந்து போன நடிகை, அவர் கேட்கும் போதெல்லாம் தான் உழைத்து சம்பாதித்த பணத்தைக் கொடுத்திருக்கிறார்.

கண்டு கொள்ளவில்லை
இதுவரை ரூ.20 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார். அந்த தனியார் நிறுவன அதிகாரி தொடர்ந்து மிரட்டியதை அடுத்து, தாங்க முடியாமல்அந்த அதிகாரியின் பெற்றோரிடம் முறையிட்டாராம் நடிகை. ஆனால், அவர்கள் இதைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வெறுத்துப் போன நடிகை, தனது நண்பர்களிடம் விஷயத்தைக் கூறியிருக்கிறார்.

யார் அந்த நடிகை
அவர்களின் ஆலோசனை படி, போலீசில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகார் மற்றும் ஆதாரங்களின்படி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த நடிகை யார் என்ற விவரத்தை பெங்களூர் போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். நடிகை ஒருவரை தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் பாலியல் வான்கொடுமை செய்தததும் பணம் கேட்டு மிரட்டி இருப்பதும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











