என்னிடம் ரூ. 15 லட்சம் பெற்று ஏமாற்றிவிட்டார்.. முன்னாள் காதலர் மீது பிக்பாஸ் நடிகை பரபரப்பு புகார்!
சென்னை: தன்னிடம் 15 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக முன்னாள் காதலர் மீது பிக்பாஸ் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சி கடந்த ஆண்டு 13வது சீசனை எட்டியது.
பிக்பாஸ் சீசன் 13ல் வழக்கத்தை போலவே ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். அவர்களில் நடிகர் அர்ஹான் கானும், ரஷமி தேசாயும் முக்கியமானவர்கள்.

பிக்பாஸ் வீட்டில் காதல்
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் ரஷமி தேசாய். பிரபல டெலிவிஷன் நடிகையான ரஷமி ஏரளாமான படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற ரஷமி தேசாய் சக போட்டியாளரான அர்ஹான் கான் மீது காதல் கொண்டார்.

அம்பலப்படுத்திய சல்மான்
பிக்பாஸ் வீட்டில் இருவரும் காதல் பறவைகளாக சுற்றி வந்தனர் ரஷமி தேசாயும் அர்ஹான் கானும். அப்போது தான் வாரம் தோறும் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளரான சல்மான் கான், அர்ஹான் கான் குறித்த ரகசியத்தை அம்பலப்படுத்தினார்.

காதல் முறிவு
அதாவது அர்ஹான் கானுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதாம். ஆனால் அதனை மறைத்துவிட்டு ரஷமி தேசாயுடன் காதல் செய்தால் அர்ஹான் கான். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரஷமி அவருடனான காதலை முறித்துக் கொண்டார்.

வைரலான ஸ்க்ரீன்ஷாட்ஸ்
இந்நிலையில் ரஷமியின் வங்கிக்கணக்கில் இருந்து அர்ஹான் கானுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட சில ஸ்க்ரீன்ஷாட்டுகள் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷமியின் ரசிகர்கள் சிலர் அந்த ஸ்க்ரின் ஷாட்டுகளை வைரலாக்கினர். மேலும் #FraudArhaanKhan என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்தனர்.

அர்ஹான் குற்றச்சாட்டு
அர்ஹான் கானின் ஒரிஜினல் பெயரான மஸர் ஷேய்க் என்ற பெயருக்கு பண பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. ரஷமி பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அவரது வங்கிக் கணக்கில் இருந்து இந்த பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த ஸ்க்ரின் ஷாட்டுகள் லீக்கானதற்கு ரஷமிதான் காரணம் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தெரியாமல் ட்ரான்ஸாக்ஷன்
ஆனால் அதனை மறுத்துள்ளார் ரஷமி. இதுகுறித்து பேசிய அவர், நான் இல்லாத போது, எனக்கு தெரியாமல் இந்த ட்ரான்ஸாக்ஷன் நடந்துள்ளது. நான் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது இந்த ட்ரான்ஸாக்ஷன் நடந்துள்ளது. நான் வெளியே வந்து அதைப் பற்றி அறிந்தபோது, எனது தனிப்பட்ட ஆவணங்களின் ஸ்கிரீன் ஷாட்களையும் இந்த பரிவர்த்தனைகளையும் எனது கணக்கு வழக்குகளை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் சிலருடன் பகிர்ந்து கொண்டேன்.

திருப்பி தர மறுக்கிறார்
அர்ஹான் எனது பணத்தை ஏன் என்னுடைய கணக்கில் இருந்து மாற்றினார்? மேலும், அவர் அந்த பணத்தை மற்ற நபர்களுக்கு மாற்றியதும் எனக்குத் தெரியாது. ஸ்கிரீன் ஷாட்களில் காணக்கூடியது போல, அர்ஹான் எனக்கு செலுத்த வேண்டிய 15 லட்சம் மட்டுமின்றி, அதைவிட அதிக பணம் தரவேண்டியுள்ளது, அவர் அதனை திருப்பி தர மறுக்கிறார்.

எந்த க்ளுவும் இல்லை
மேலும் ஸ்கிரீன் ஷாட்களை சமூக ஊடகங்களில் கசியவிட்டவர்கள் யார் என்பது பற்றி எனக்கு எந்தக் க்ளுவும் இல்லை. நான் கசிய விட வேண்டும் என்று நினைத்திருந்தால் அதற்காக இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அர்ஹானுடன் நான் எதுவும் செய்ய விரும்பவில்லை. நடந்த அந்த முழு சம்பவமும் என்னை ரொம்பவே தொல்லை செய்கிறது. அது என்னை மனரீதியாக பாதித்துள்ளது என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











