பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் !
சென்னை : தமிழில் நடித்த ஓரிரு திரைப்படங்களிலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ராசி கண்ணா தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகையாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் இப்பொழுது பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவைப் போல தமிழ் சினிமாவிலும் தனது மார்க்கெட்டை உயர்த்த அடிக்கடி போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அசைக்க முடியாத
ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக திரைப்படத்துறைக்குள் காலடியை பதித்த ராசி கண்ணா அதைத் தொடர்ந்து தெலுங்கில் எக்கச்சக்கமான திரைப்படங்களில்நடித்து தெலுங்கு சினிமாவில் அசைக்க முடியாத வளர்ந்து வரும் நடிகையாக தனது கொடியை நாட்டினார்.

தமிழில் அறிமுகம்
இந்நிலையில் தமிழ் ரசிகர்கள் இவரை தமிழ் திரைப்படங்களில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் அதர்வா, விஜய்சேதுபதி, நயன்தாரா என பிரபலமான நடிகர்களின் நடிப்பில் அட்டகாசமான த்ரில்லர் திரைப்படமாக வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் முதல் படமே வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன

வரிசையாக பல படங்கள்
ஜெயம்ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்கியன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். தற்போது இவர், துக்ளக் தர்பார், அரண்மனை3 ,மாதவி, சைத்தான்கே பாச்சா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஓய்யார போஸ்
இன்ஸ்டாகிராம்,ட்விட்டர் ஆகிய சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது வித வித புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளார். இதனால், இணையத்தில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட செல்கிறது. தற்போது இவர், ஜன்னலுக்கும் கண்ணாடிக்கு இடையே அமர்ந்துக்கொண்டு ஒய்யார போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் உங்கார வேற இடம்கிடைக்கலையா என கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











