அடிக்கிற வெயிலுக்கு குளுகுளுன்னு கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட ராஷி கண்ணா!
சென்னை: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஹாரர் கதை களத்தில் ராஷி கண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 3 கலவையான விமர்சனங்களை பெற்றது.
துக்ளக் தர்பார் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஹிந்தியில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் வெப் சீரிஸில் ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இடத்தை பிடிக்க தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் ராஷி கண்ணா இப்பொழுது வெயிலுக்கு இதமாக குளுகுளு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க விட்டுள்ளார்.

நல்ல வரவேற்பு கிடைத்தது
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா ஆகியோரின் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற
இமைக்கா
நொடிகள் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணாவுக்கு முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாறினார்

மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன்
சங்கத்தமிழன் வெற்றியைத்
தொடர்ந்து
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக துக்லக் தர்பார் என்ற படத்திலும் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஃபேமிலி மேன் வெப் சீரியஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் இந்தியில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் வெப்சீரிஸ் ஒன்றில் விஜய் சேதுபதி, ஷாகித் கபூர் ஆகியோர் நடிக்க ராஷி கண்ணா கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளனர். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ளது.

ராஷி கண்ணாவின் அபார நடிப்பு
அரண்மனை 1 மற்றும் 2 வெற்றியைத் தொடர்ந்து அரண்மனை மூன்றாவது பாகத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் சுந்தர் சி . பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் வெளியானது. ஆர்யா இதில் ஹீரோவாக நடித்திருந்தார். ராஷி கண்ணா இதில் கதாநாயகியாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். மிகச் சிறந்த நடிப்பு மட்டுமல்லாமல் தேவையான இடத்தில் கவர்ச்சியையும் அள்ளி தெளித்த ராஷி கண்ணாவின் அபார நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றது.

வெயிலுக்கு குளுகுளுன்னு ஹாட் பிக்
இப்போது கைவசம் கார்த்தியின் சர்தார், தனுசுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் ராஷி கண்ணா நடித்து வருகிறார். விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை இடத்தை பிடிப்பதற்காக அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்குகிறார். அந்த வகையில் இப்போது அடிக்கிற வெயிலுக்கு குளுகுளுன்னு செம ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையதளத்தை மீண்டும் பற்ற வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications