Deepfake video: அச்சுறுத்தும் AI.. உள்ளாடையோடு..! ராஷ்மிகாவை தொடர்ந்து கஜோலின் போலியான வீடியோ

சென்னை: பெண்களை அச்சுறுத்தும் டீ பேக் வீடியோக்கள் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது அதில் ராஷ்மிகா, கத்ரீனாவை தொடர்ந்து கஜோலின் போலியான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கஜோல் உடை மாற்றும்போது உள்ளாடையோடு சிரிப்பது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருவது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

Actress rashmika and katrina kaif kajols deepfake videos on social media

அந்த வீடியோ டிக் டாக்கில் பகிரப்பட்ட சமூக வலைத்தள பிரபலத்தின் முகத்தை மாற்றி அதில் கஜோல் முகத்தை வைத்து உருவாக்கப்பட்டது என்று அம்பலமாகி இருக்கிறது.

நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பம் காரணமாக பல நல்ல விஷயங்களும் நடந்து கொண்டிருக்கிறது. சில மோசமான கெட்ட விஷயங்களும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரி தான் தற்போது வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம் மனிதர்களின் குரல்களை அப்படியே உருவாக்குவது, முகங்களை வீடியோவில் போலியாக மாற்றுவது என பல க்ரைம் வேலைகளை மிக சாதாரணமாக செய்து வருகிறது.

ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செய்தி சேனல்களிலும் பிற இடங்களிலும் தங்களுடைய வேலையை எளிமைப்படுத்தி விடலாம் என்று பலர் நினைத்துக் கொண்டிருந்தாலும் இதனை பயன்படுத்தி பலர் மோசமான காரியங்களில் ஈடுபட்டு விடுவார்கள் என்று ஆரம்பத்தில் இருந்தே சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள். அதிலும் ஏஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள் உண்மை எது போலி எது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அச்சுறுத்த தொடங்கி இருக்கிறது.

இது ஏஐ தொழில்நுட்பத்தில் இருக்கும் வாய்ப்புகளை தவறாக பயன்படுத்தி பெண்களை தவறாக சித்தரித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஏஐ தொழில்நுட்பம் வந்ததும் தமன்னாவின் காவாலா பாடலுக்கு பலர் தங்களுடைய முகங்களை எடிட் செய்து அந்த வீடியோவில் பயன்படுத்தி மகிழ்ந்திருந்தனர். ஆனால் இப்போது அது போன்ற செயல்களால் வரும் ஆபத்தை ரசிகர்களும் பல பிரபலங்களும் புரிந்துகொள்ள தொடங்கி இருக்கின்றனர்.

சமீபத்தில் நடிகை ராஸ்மிகா மந்தனா லிப்ட்லிருந்து வெளியே வருவது போன்ற போலியான Deepfake video ஒன்று வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க அதுபோல நடிகை கத்ரீனா கைப்பின் போலியான வீடியோவும் வைரலானது. இதற்கும் டெல்லி காவல்துறை இது தொடர்பான வழக்கு பதிவு செய்து இந்த வீடியோக்கின் url ஐ கண்டுபிடித்து அதை நீக்குவதற்கான உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதைத்தொடர்ந்து இப்போது கஜோல் உடை மாற்றும் அறையில் உள்ளாடையோடு சிரிப்பது போன்ற போலியான வீடியோ ஒன்று வெளியாகி மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது சமீபத்தில் ஒரு ரீல்ஸ் டிரண்ட் ஆகி வந்தது. அதாவது Get ready with me என்ற கூறப்பட்டது. அதில் ஒருவர் எப்படி தான் அலுவலகத்திற்கோ, ஷாப்பிங்கிற்கோ தயாராகி வெளியே கிளம்புகிறார்? என்னென்ன உடைகள் அணிகிறார். எந்தெந்த மேக்கப் சாதனங்களை உபயோகிக்கிறார் என்பதை எல்லாம் விரிவாக சொல்வார்கள்.

இதன் மூலம் அந்தந்த உடை நிறுவனங்கள் மற்றும் மேக்கப் சாதன தயாரிப்பு நிறுவனங்களுக்கு விளம்பரம் கிடைக்கும். அதற்காக அந்த இன்சபூளூயன்ஸர்களுக்கு பணமும் கொடுக்கப்படும். அத்தகைய Get ready with me வீடியோ ஒன்றில் தான் இப்போது கஜோலின் முகம் Deepfake செய்யப்பட்டிருக்கிறது.

இப்படியாக நாளுக்கு நாள் பிரபலங்கள் வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பிரபலங்கள் என்பதால் உலகத்தில் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. அதுவே சாமானிய பெண்களாக இருந்தால் அவர்களுடைய வாழ்க்கை என்னாவது? அதனால் கட்டுப்பாடு இன்றி வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அரசு விரைவில் சட்ட விதிகளுக்கு கொண்டுவர வேண்டும். இந்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X