விஜய் தேவரகொண்டா ரொம்ப நல்ல பையன்.. புகழ்ந்து கொட்டிய நடிகை..!!
சென்னை: விஜய் தேவரகொண்ட ரொம்ப நல்ல பையன் என அவருடன் ஜோடி போட்ட நடிகை புகழ்ந்து கொட்டியுள்ளார்.
தெலுங்கில் வெளியான 'கீத கோவிந்தம்' திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியாக இடம் பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமானார் ராஷ்மிகா.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா உடன் ஜோடி சேர்ந்தார் ராஷ்மிகா.

ராஷ்மிகா ஜோடி
கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டியர் காம்ரேட்'. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

ரொம்ப நல்ல பையன்
இதனிடையே சென்னையில் மியூசிகல் நைட் நிகழ்ச்சியில் படத்தின் நாயகி ராஷ்மிகா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "நிறைய தமிழ்ப் படங்கள் பார்த்துதான் தமிழ் கற்றுக்கொண்டேன். விஜய் தேவரகொண்டா ரொம்ப நல்ல பையன்.

கிரிக்கெட் பயிற்சி
அவரோடு 2 படங்களில் நடித்துவிட்டேன். மிகவும் கடினமாக உழைக்கக் கூடியவர்" என கூறினார். மேலும் இந்த படத்திற்காக சில மாதங்கள் கிரிக்கெட் பயிற்சி எடுத்து நடித்ததாகவும் ராஷ்மிகா கூறினார்.

பிசியான நடிகை
ராஷ்மிகா நடிக்க வந்த சில காலங்களிலே தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











