டாப் ஹீரோக்களின் படத்தில் கமிட்டாகும் கார்த்தி பட நடிகை.. முதல் முறையாக அந்த நடிகருடனும் ரொமான்ஸ்!
சென்னை: பிரபல நடிகையான ராஷ்மிகா மந்த டாப் ஹீரோவின் படத்தில் கமிட்டாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.
அடுத்தடுத்து கன்னட படங்களில் பிஸியாக இருந்த ராஷ்மிகா மந்தனா, சலோ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கும் என்ட்ரி கொடுத்தார்.

கார்த்தியின் சுல்தான்
தொடர்ந்து கன்னடம் தெலுங்கு என நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இந்தப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

மிஷ்ன் மஞ்சு
மேலும் அல்லு அர்ஜூனின் படம் உட்பட அடுத்தடுத்து இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, மிஷன் மஞ்சு என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார். இதில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

ஜூனியர் என்டிஆருடன் ஜோடி
தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படத்தில் கமிட்டாகி வரும் ராஷ்மிகா மந்தனா, தற்போது ஜூனியர் என்டிஆரின் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தில் நடிக்கவுள்ளார் ராஷ்மிகா. ஜூனியர் என்டிஆருடன் அவர் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

மே மாதம் ஷூட்டிங்
திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்திற்காக ராஷ்மிகா, பாலிவுட் நடிகைகளான ஆலியாபட், கியாரா அத்வானி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ராஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். வருகிற மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











