ஆமாம்.. நான் காதலிக்கிறேன்.. ரசிகர்களிடம் உண்மையை கொட்டித் தீர்த்த கார்த்தி பட நடிகை!

சென்னை: தான் காதலிக்கும் விஷயம் குறித்து ரசிகர்களிடம் கொட்டித் தீர்த்துள்ளார் பிரபல நடிகை.

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரை காதலித்து வந்தார். இவர்களின் காதல் திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்றது.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

ஆனால் திடீர் கருத்து வேறுபாட்டால் அந்த நடிகருடனான காதலை முறித்தார் ராஷ்மிகா மந்தனா. அதன் பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனா பல நடிகர்களுடனும் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.

கரண்ட் லவ்வர்

கரண்ட் லவ்வர்

குறிப்பாக தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாதான் ராஷ்மிகாவின் கரண்ட் லவ்வர் என்ற ரேஞ்சுக்கு பேச்சு இருந்தது. இருவரும் இணைந்து கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்தனர். அதன் பிறகு சமூக வலை தளங்களிலும் ஒருவரை ஒருவர் டேக் செய்து பேசி வந்தனர்.

யாரை காதலிக்கிறீர்கள்?

யாரை காதலிக்கிறீர்கள்?

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் #AskMeAnything செஷனில் ராஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது பெரும்பாலான ரசிகர்கள், அவரது ரிலேஷன்ஷிப்பை மையப்படுத்தியே கேள்விகளை கேட்டனர். குறிப்பாக நீங்கள் யாரை காதலிக்கிறீர்கள்? யாருடன் டேட்டிங் செல்கிறீர்கள் என்றெல்லாம் கேள்வி கணைகளை தொடுத்தனர்.

நான் சிங்கிள் தான்

நான் சிங்கிள் தான்

ரசிகர்களின் அனைத்து கேள்விக்கும் ஒட்டு மொத்தமாய் ஒரே பதிலாய் கூறி திக்குமுக்காட செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, எனக்கு தெரிந்தவர்கள் எல்லோருடனும் என்னுடைய பெயரை சேர்த்து பேசுபவர்களுக்கு.. நான் சிங்கிள்தான்.. நான் அதைத்தான் காதலிக்கிறேன்..

ரசிகர்கள் கப்சிப்

ரசிகர்கள் கப்சிப்

தனிமையில் இருப்பதை பற்றி நான் பேசுகிறேன்.. என்னை நம்புங்கள், நீங்கள் தனிமையில் இருப்பதை ரசிக்கும் போது உங்கள் காதலருக்கான உங்கள் தர நிலைகள் உயரும்.. என ஒரே போடாக போட்டுள்ளார். ராஷ்மிகா மந்தனாவின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் கப்சிப் என ஆகிவிட்டனர்.

கார்த்தியுடன் சுல்தான்

கார்த்தியுடன் சுல்தான்

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது கன்னட நடிகர் துருவா சர்ஜாவுடன் பொகறு என்ற படத்திலும் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X