நாய் சேகர் பட போஸ் கொடுத்த புஷ்பா பட ஹீரோயின்... நன்றி சொன்ன ஹீரோ

சென்னை : நடிகர் சதீஷ் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் நாய் சேகர்.

இந்தப் படம் வரும் 13ம் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்தப் படத்தில் நாய் போன்ற போஸ் கொடுக்கும் சதீஷை போஸ்டர்களில் பார்க்க முடிகிறது.

நாய் சேகர் படம்

நாய் சேகர் படம்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் தயாரித்துள்ள படம் நாய் சேகர். படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். காமெடி நடிகர் சதீஷ் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகியுள்ளார் பவித்ரா லஷ்மி.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

இந்தப் படம் வரும் 13ம் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். படத்தில் ஒரு மனிதன் நாயாகவும், நாய் மனிதனாகவும் மாறினால் என் நடக்கும் என்பதை கதைக்களமாக்கியுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

காமெடி கலாட்டா

காமெடி கலாட்டா

முழுவதுமாக காமெடியை மட்டுமே நம்பி படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர். இந்தப் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காமெடி நடிகரான சதீஷ் இந்தப் படத்தின்மூலம் நாயகனாக நடித்துள்ளார்.

நாய்க்கு பின்னணி கொடுத்த மிர்ச்சி சிவா

நாய்க்கு பின்னணி கொடுத்த மிர்ச்சி சிவா

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாய்க்கு மிர்ச்சி சிவா பின்னணி கொடுத்துள்ளார். படத்திற்கு அஜிஷ் இசையமைத்துள்ளார். ஒரு பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் நாய் போன்ற போசுடன் சதீஷ் காணப்படும் பாடல் ஒன்று சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது.

நாய் போன்று போஸ்

நாய் போன்று போஸ்

இந்த போஸ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பிரபல ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா, இந்த போசை கொடுத்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாக்கை நீட்டி, கையை மடக்கி அவர் கொடுத்துள்ள இந்த போஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்நிலையில் இதற்காக சதீஷ் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X