சாய் பல்லவி நடித்தால்.. நான் நடிக்க மாட்டேன்.. பிடிவாதம் பிடிக்கும் ரஷ்மிகா மந்தனா !

ஹைதராபாத் : மிடில் கிளாஸ் அப்பாயி படத்தை தொடர்ந்து நானி மற்றும் சாய்பல்லவி இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் ஷ்யாம் சிங்கா ராய் படத்தின் அப்டேட்டுகள் ஓரிரு நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்து.

இந்நிலையில் டாக்சி வாலா படத்தை இயக்கிய இயக்குனர் ராகுல் சங்க்ரித்யான் இயக்கத்தில் உருவாகும் ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்பதால் மற்றொரு ஹீரோயினாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்தது.

ஆனால் இந்த படத்தில் சாய் பல்லவி நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என ரஷ்மிகா கூறி வருவதாக டோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.

மிகக்குறுகிய

மிகக்குறுகிய

தனது க்யூட்டான நடிப்பாலும் ரசிக்கவைக்கும் எக்ஸ்பிரஸினாளும் பல கோடி ரசிகர்களின் இதயங்களை மிகக்குறுகிய காலத்திலேயே வென்று தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா.

சூப்பர் ஸ்டார்களுடன்

சூப்பர் ஸ்டார்களுடன்

இவர் நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இவரின் மார்க்கெட் இப்பொழுது உச்சத்தில் உள்ளது. அடுத்தடுத்த படங்களில் சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து வரும் ரஷ்மிகா சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் இணைந்து சரிலெரு நீகேவ்வாரு படத்தில் நடித்திருந்தார்.

விஜய்யின் 65வது படம்

விஜய்யின் 65வது படம்

இந்த படமும் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் ரஷ்மிகாவுக்கு தமிழிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழில் எப்போது இவர் அறிமுகமாவார் என அனைவரும் காத்துக் கொண்டிருந்த வேளையில் தற்பொழுது கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் இவர் நடித்து வருகிறார் என கேள்விப்பட்ட தமிழ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் சுற்றி வரும் நிலையில், தளபதி விஜய்யின் 65வது படத்தில் ரஷ்மிகா தான் ஹீரோயின் என்ற செய்திகளும் வலம் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

நடிக்க பேச்சுவார்த்தை

நடிக்க பேச்சுவார்த்தை

இந்நிலையில் ஏற்கனவே தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்த ரஷ்மிகா தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தற்போதுள்ள லாக்டவுன் சூழ்நிலையில் புஷ்பா படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கும் வேளையில், இவர் தற்பொழுது நானி நடிக்கவிருக்கும் ஷியாம் சிங்கா ராய் படத்தில் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Recommended Video

Surya Karthi on board Together | Ayyapanum Koshiyum, Prithviraj, Biju Menon
ரஷ்மிகா பிடிவாதம்

ரஷ்மிகா பிடிவாதம்

ஷியாம் சிங்கா ராய் படத்தில் ஏற்கனவே சாய்பல்லவி ஹீரோயினாக நடக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்பதால் படக்குழு ரஷ்மிகாவை அணுகியுள்ளனர்.
இந்த படத்தில் சாய்பல்லவியும் நடிக்கிறார் என்பதை கேள்விப்பட்ட ராஷ்மிகா, சாய்பல்லவி நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்துவிடுவார். இந்நிலையில் அவர் நடிக்கும் படத்தில் தானும் நடித்தால் தன்னை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று பிடிவாதம் பிடித்து வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X